முதலில் மனதளவில், அப்புறம் உடலளவில்… அமரன் படம் குறித்து சிவகார்த்திகேயன்

Published On:

| By Kumaresan M

தெலுங்கில் கோட் மற்றும் வேட்டையன் இரண்டு திரைப்படங்களும் முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் ரூ. 2.3 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தன. ஆனால், அமரன் படம் ப்ரீ புக்கிங்கில் ரூ. 2.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இந்தநிலையில், இந்த  படத்தில் நடித்தது குறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது,  ”படத்தில் ராணுவ உடையை, கடைசியாக போடும் போது நினைவாக வைத்துக்கொள்ளவதற்காக அந்த  உடையை வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டேன். ராணுவ உடை அணிந்த பிறகு என் உடல், நடத்தையில் சின்னச் சின்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.  காமெடி, கலாய்ப்பது என்பது என்னிடத்தில் இயல்பிலேயே உள்ள விஷயம்.  படப்பிடிப்பு தளம் சீரியஸாக இருந்தாலும் நான் கொஞ்சம் ஜாலியாத்தான் இருப்பேன்.

அதனால்,  இந்த படத்தில் நடிக்கும் முன்னர் முதலில் என்னை மன ரீதியாக தயார்படுத்தினேன். பின்னர் தான் உடலை தயார் செய்தேன். உடல் வலிமை இருந்தால் தான்,  ராணுவ வீரராக  நடிக்க சரியாக இருக்கும். நானோ,  ஜிம்முக்கு சென்று கடினமாக எடைகளை தூக்கக்கூடிய ஆள் நான் கிடையாது. ஆனால், அமரன் படத்துக்காக கொஞ்சம் அதிகமாகவே உடற்பயிற்சி செய்தேன். இதனால் கொஞ்சம் உடலில் மாற்றம் வந்தது.

இந்த படத்தை பார்த்துவிட்டு ராணுவ அதிகாரிகள் என்னை  பாராட்டினார்கள்.  நீங்கள் தவறாக சினிமா துறையை தேர்வு செய்திருக்கிறீர்கள்.  எங்களுடன்தான் நீங்கள் இருந்திருக்க வேண்டுமென படத்தை பார்த்து முடித்ததும் ராணுவ  அதிகாரிகள் சொன்னபோது எனக்கு கவுரவமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

”தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் ஏன் தயக்கம்?”: ஸ்டாலினுக்கு எல்.முருகன் கேள்வி?

போயிங் 757 ல் வந்து இறங்கி குப்பை லாரியில் ஏறிய ட்ரம்ப்… வாயை வச்சுட்டு சும்மா இரு குரங்கு கதை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share