உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் எம்.ஆர்.ஐ ஸ்கேனர்… பின்னணியில் யார்?

Published On:

| By Kumaresan M

இந்தியாவில் புகழ்பெற்ற மருத்துவமனைகள், தரமான சிசிச்சை மக்களுக்கு கிடைத்து வந்தாலும் மருத்துவ உபகரணங்களுக்கு இப்போதும் வெளிநாடுகளையே நம்பியிருக்கிறோம்.

இந்தியாவில் 85 சதவிகித மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில், எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்ட உபகரணங்களும் அடக்கம்.

இதனால், சிகிச்சை கட்டணம் அதிகரிப்பதுடன் பல நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க முடியாத நிலையும் உள்ளது. இதனால், உள்நாட்டிலேயே எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்ட உபகரணங்களை தயாரிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. first indigenously MRI in india

முதல்கட்டமாக உள்நாட்டிலேயே எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உபகரணம் தயாரிக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வரும் அக்டோபர் மாதத்தில் இந்த உபகரணம் பரிச்சாத்திய முறையில் பொருத்தப்படவுள்ளது. இதன் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு, குறைகள் இருந்தால் களையப்படும். பின்னர் படிப்படியாக பல மருத்துவமனைகளிலும் பொருத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, ‘தன்னம்பிக்கை இந்தியா’  திட்டத்தின் கீழ், அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (SAMEER) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த நிறுவனம்தான் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்கேனரை பொருத்தி தரத்தை பரிசோதிப்பதற்கு பொறுப்பு ஆகும். மேலும், புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 6 MEV லீனியர் ஆக்ஸிலரேட்டர்களுடன் கூடிய எம்.ஆர்.ஐ ஸ்கேனரும் உருவாக்கப்பட்டுள்ளது.first indigenously MRI in india

இந்தியாவில் ஏற்கனவே சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஃபிஷர் மெடிக்கல் வென்ஞ்சர்ஸ் மற்றும் பெங்களூருவை சேர்ந்த வோக்செல்கிரிட்ஸ் இன்னோவேசன்ஸ் போன்ற பல நிறுவனங்கள் எம்ஆர்ஐ உபகரணங்களை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு 61,179 ஆயிரம் கோடி மதிப்புக்கு வெளிநாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்துள்ளோம். இதுவே, 2024 ம் ஆண்டு 68,885 ஆயிரம் கோடியாக உயர்ந்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share