வந்துடுச்சு ரயிலுக்குள்ளயும் ஏ.டி.எம்! இனி டென்ஷன் வேணாம்!

Published On:

| By Aara

ஏ.டி.எம்.மை ரோட்ல பார்த்திருப்பீங்க, பஸ் ஸ்டாண்ட்ல பார்த்திருப்பீங்க… ரயில்வே ஸ்டேஷன்ல கூட பார்த்திருப்பீங்க. ஆனா ரயில்ல பார்த்திருக்கீங்களா? first ATM service in train

முதல் முறையாக, மத்திய ரயில்வே (CR), மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை அடிப்படையில் பணம் எடுக்கும் ஏ.டி.எம் இயந்திரத்தை (ATM) நிறுவியுள்ளது.

மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா இதுபற்றி கூறுகையில், “மகாராஷ்டிரா வங்கியின் உதவியோடு முதல் முறையாக ஏடிஎம் மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சேர் கார் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெட்டியின் பின்புறத்தில், ஏற்கனவே தற்காலிக சரக்கறையாகப் பயன்படுத்தப்பட்ட இடத்தில் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில் ஓடும்போதே ஏடிஎம் மெஷினை பயன்படுத்தலாம். பாதுகாப்புக்காக ஒரு ஷட்டர் கதவும் அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணிமனை தொழிலாளர்கள் இந்த ஆல்ட்ரேஷன் பணியை மேற்கொண்டனர் விரைவில் அனைத்து பயணிகளுக்கும் இதுபோன்ற ரயில் ஏடிஎம் சேவை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பயணிகள் இந்த முயற்சியை பாராட்டி சமூக தளங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
பஞ்சவதி எக்ஸ்பிரஸ் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) மற்றும் நாசிக் மாவட்டத்தில் உள்ள மன்மத் சந்திப்பு இடையே தினமும் இயக்கப்படுகிறது.

இது ஒரு முறை பயணம் செய்ய சுமார் 4 மணி நேரம் 35 நிமிடங்கள் ஆகும். மகாராஷ்டிராவிலேயே இந்த ரயில் ரூட் மிகவும் பிரபலமான ரூட்டுகளில் ஒன்றாகும். first ATM service in train

இதேபோன்ற ரயில் ஏ.டி.எம்.கள் மற்ற ரயில்களிலும் குறிப்பாக தமிழகத்தின் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே உருவாகியிருக்கிறது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share