மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Published On:

| By Kalai

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், இந்திய கடற்படைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 3 மீனவர்கள் மீது இந்திய கடற்படை இன்று(அக்டோபர் 21) காலை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் மீனவர் வீரவேல் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஐ.என்.எஸ். பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியில் இருந்த இந்திய கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

இதில் ஒருவர் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் இந்திய கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்துக்குரியது.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை பிரதமர் நன்கு அறிவீர்கள்.

ADVERTISEMENT

ஆனால் இந்திய கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமையும்.

எனவே, பிரதமர் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கலை.ரா

13 வருட ஏக்கம் தணிந்தது: வெஸ்ட் இண்டீஸை வீட்டுக்கு அனுப்பிய அயர்லாந்து அணி!

சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

Photo of author
Kalai
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share