நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம்… திடீர் ட்விஸ்ட்!

Published On:

| By Kavi

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து எந்த பணத்தையும் தீயணைப்புத் துறையினர் கண்டுபிடிக்கவில்லை என்று டெல்லி தீயணைப்பு துறை விளக்கமளித்துள்ளது. no money from Judge Yashwant Verma house

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போது, அவரது வீட்டில் இருந்து கட்டு கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன.  இதையடுத்து உச்ச நீதிமன்றம் கொலிஜியம் கூடி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு பணியிடம் மாற்றம் செய்ய பரிந்துரை செய்ததாகவும், அவர் மீது முதற்கட்ட விசாரணையை தொடங்கியதாகவும்  கூறப்பட்டது. 

இந்தநிலையில்  “நீதிபதி யஷ்வந்த் வர்மாவை  பணியிட மாற்றம் செய்வதற்கு கொலீஜியம் அதிகாரப்பூர்வமாக இன்னும் பரிந்துரைக்கவில்லை. அவரை மாற்றுவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம். டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம்” என்று உச்ச நீதிமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக பார் & பென்ச் ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தசூழலில்,  நீதிபதி யஷ்வந்த் வர்மா  விவகாரத்தில் திடீர் திருப்பமாக அவரது வீட்டில் நாங்கள் எந்த பணத்தையும் கண்டெடுக்கவில்லை என்று தீயணைப்புத் துறை கூறியுள்ளது. 

டெல்லி தீயணைப்புத் துறை தலைவர் அதுல் கார்க் இன்று (மார்ச் 21) செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “மார்ச் 14 இரவு 11.35 மணிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், நீதிபதி வர்மா  வீட்டில் தீ பற்றி ஏரிவதாக கூறினர். இதையடுத்து வீரர்கள் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் இரவு 11.43 மணியளவில் அவரது வீட்டுக்கு  சென்றனர். வீட்டுப் பொருட்கள் எல்லாம் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்டோர் ரூமில் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அந்த தீயை கட்டுப்படுத்த 15 நிமிடங்கள் ஆனது. 

தீயை அணைத்த உடனேயே, தீ விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். அதன்பிறகு, தீயணைப்புத் துறையினர் குழு அந்த இடத்தை விட்டு வெளியேறியது. எங்கள் தீயணைப்பு வீரர்கள்  தீயணைப்பு நடவடிக்கையின் போது எந்த பணத்தையும் கண்டுபிடிக்கவில்லை” என்று கூறியுள்ளார். no money from Judge Yashwant Verma house 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share