ADVERTISEMENT

அதிகாலையில் கோவை துணிக் கடையில் தீ விபத்து!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவை ஒப்பணக்கார வீதியில் செயல்பட்டு வந்த துணிக் கடையில் இன்று (அக்டோபர் 22) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை, ஒப்பணக்கார வீதியில் பாபு என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ லட்சுமி சில்க்ஸ் என்ற துணிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த துணிக் கடையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த கடையின் இரண்டாவது மாடியில் இருந்து புகை வெளியேறிய நிலையில், அப்பகுதியில் இருந்த பாதுகாவலர்கள் உடனடியாக கடை உரிமையாளருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இரண்டாவது மாடியில் தீ பற்றிய நிலையில் கிரேன் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் , மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்தினர்.

ADVERTISEMENT

அதிகாலை நேரத்தில் நடந்த தீ விபத்து காரணமாக ஒப்பணக்கார வீதியில் பதற்றமான சூழல் நிலவியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீ கட்டுப்படுத்தப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share