சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து!

Published On:

| By Monisha

fire accident in salem government hospital

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

சேலம் அரசு மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று (நவம்பர் 22) காலை திடீரென்று ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு புகை வந்துள்ளது. தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து கீழ் தளத்தில் உள்ள அறைகளுக்கு மாற்றினர்.

அப்போது ஏசியில் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தால் மருத்துவமனை முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிறிது நேரத்தில் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் புகை அதிகமாக சூழ்ந்துள்ளதால் மருத்துவமனையில் உள்ள கண்ணாடிகளை உடைத்து புகையை வெளியேற்றி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் செல்லும் திசையென்ன?

Bigg Boss 7 Day 51: கதறி அழுத விசித்ரா…அரவணைத்த ஹவுஸ்மேட்ஸ்!

பிகார் இடஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு: பாஜக – ஜேடியு மோதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share