மாலத்தீவில் தீ விபத்து: 9 இந்தியர்கள் பலி!

Published On:

| By Kalai

மாலத்தீவில் நடந்த தீவிபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவின் தலைநகர் மாலேவில் வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் நேற்று(நவம்பர் 9) நள்ளிரவு வாகன நிறுத்தும் இடத்தில் திடீரென தீப்பற்றி இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த தீ வீடுகளுக்கும் பரவியுள்ளது. தீயில் கருகி 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 10 பேரில் 9 பேர் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது. ஒருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தியர்கள் உயிரிழந்த தகவலை இந்திய தூதரகமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. தீ விபத்து துயரமளிக்கிறது, உயிரிழப்புகளால் கவலையடைந்துள்ளோம் என்று இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மாலத்தீவு நிர்வாகத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் சிக்கி பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

கலை.ரா

கோவை சம்பவம்: நெல்லையில் அமலாக்கத்துறை சோதனை!

ஆளுநரிடம் காத்திருக்கும் மசோதாக்கள் – கட்டாயப்படுத்த முடியாது : அமைச்சர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share