அரசுப் பள்ளியில் 10 டன் புத்தகங்கள் இருந்த இடத்தில் தீ!

Published On:

| By christopher

செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள்கோவில் அரசுப் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு  10 டன் புத்தகங்கள் இருந்த இடம் எரிந்து நாசமாகி உள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அனுமந்தபுரம் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.

ADVERTISEMENT

இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள ராமானுஜம் பிளாக்கில், செங்கல்பட்டு கல்வி மாவட்ட அரசு பள்ளி மாணவ – மாணவியருக்கு வழங்கப்படும் புத்தகங்கள் குடோன் உள்ளது. இதில் கடந்த 2018-19ம் ஆண்டு பழைய புத்தகங்கள் சுமார் 10 டன் குடோனில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 29) பகல் புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

ADVERTISEMENT

இதனைக் கண்ட என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ADVERTISEMENT

இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் நடத்திய விசாரணையில், மின் கசிவு காரணமாக அல்லது மர்ம நபர்கள் தீ வைத்தனரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

“பள்ளியில் என்.எஸ்.எஸ் முகாம் நடைபெற்றதால் தீ விபத்து உடனடியாக கண்டறியப்பட்டு பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் தடுக்கப்பட்டது. இந்த விபத்து சதி செயலா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் புத்தகங்கள் அனைத்தும் 2018 – 19 ஆண்டுக்கான புத்தகங்கள். இந்தப் புத்தகங்களை எடுத்துச் செல்லும்படி பாடநூல் கழகத்திற்கு அறிவித்து கடிதம் அனுப்பப்பட்டு விட்டது.

ஆனால், அவர்கள் இன்னும் அப்புறப்படுத்தவில்லை” என ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : மிளகு சம்பா

இந்த பதிலை எதிர்பார்க்கவே இல்லை – அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: சீனியர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட்… பொன்முடியோடு முடிந்து போன பின்னணி!

“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பரிசாக கொடுங்கள்” – மோடி அட்வைஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share