சென்னையில் தீ விபத்து : உடல் கருகி இருவர் பலி!

Published On:

| By Kavi

 Fire accident in Chennai Two people died

சென்னையில் ஏற்பட்ட தீ  விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். Fire accident in Chennai Two people died

சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகரில் ஆடிட்டர் ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு இன்று (மே 11) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த விபத்தில் தீயில் கருகி வீட்டில் இருந்த முதிய தம்பதியரான  நடராஜன் (70) மற்றும் அவரது மனைவி தங்கம் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஆடிட்டர் ஸ்ரீராம் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். 

அவரது வீட்டில் வேலை செய்த பெண், தன்னை காப்பாற்றிக் கொள்ள மாடியில் இருந்து குதித்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து வந்த  கோயம்பேடு துணை ஆணையாளர் அதிவீர பாண்டியன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்று இன்னும் தெரிய வரவில்லை. எனினும் மின்கசிவால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.   இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.  Fire accident in Chennai Two people died

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share