இனி 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். Fines for only 5 types of traffic violations
சென்னையில் விபத்துகளை தடுக்க ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் நின்று விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
காவல்துறையை கண்டு வேகமாக பறக்கும் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்குவதும் நடப்பதுண்டு. போலீசார் கும்பலாக நின்று வாகனங்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் சென்னை காவல் ஆணையர் அருணுக்கு சென்றது.
இந்தநிலையில் ஆணையர் அருண் போக்குவரத்து போலீசாருக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதுவரை 25 வகையான விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தை அதிவேகமாக ஓட்டுதல்,
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்,
நோ என்ட்ரியில் வாகனத்தை ஓட்டிச் செல்லுதல்,
மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல்,
இரு சக்கர வாகனத்தில் இருவருக்கும் மேல் செல்லுதல்
ஆகிய 5 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
கண்காணிப்பு கேமரா மூலம் அபராதம் விதிக்கப்படுவது தொடரும் என்று ஆணையர் அருண் கூறியுள்ளார். Fines for only 5 types of traffic violations