மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

Published On:

| By Jegadeesh

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு சொந்தமான குண்டனூரில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

சில நிதி விவகாரங்களில், ஏற்பட்ட பண பரிவர்த்தனை காரணமாக மோகன்லாலிடம் விளக்கம் கேட்பதற்காக இன்று(பிப்ரவரி 17 ) வருமான வரித்துறை அவருடைய வீட்டில் சோதனை நடத்தி, வாக்குமூலம் சேகரித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, நடத்தப்பட்ட சோதனையின் ஒரு பகுதியாக, மோகன்லாலின் வாக்குமூலத்தை வருமான வரித்துறை பதிவு செய்துள்ளனர். நிதி விவகாரங்கள் தொடர்பாக மோகன்லாலிடம் சில ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

அதே போல் வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னதாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருக்கும், மோகன்லாலுக்கும் இடையே நடந்த வணிக ரீதியான பண பரிவர்த்தனை குறித்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களையும் வருமான வரித்துறை ஆய்வு செய்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் ஆய்வு நிறைவடைந்த நிலையில், மீண்டும் சில ஆவணங்களை கைப்பற்றி மீண்டும் விசாரணையை வருமான வரித்துறை துவங்கியுள்ளனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

எஸ்.எஸ்.சி தேர்வு : முக்கிய அறிவிப்பு!

சாதிரீதியாக பிரச்சாரம் செய்கிறாரா எடப்பாடி? அதிமுக முன்னாள் அமைச்சர் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share