ஃபிளைட் கிளப் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

Published On:

| By Selvam

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் “G Squad” நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள முதல் படம்  Fight Club.

உறியடி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விஜய் குமார் Fight Club படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை அப்பாஸ் ஏ ரஹ்மான் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 8 ) Fight Club படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகி இருக்கிறது. “யாரும் காணாத” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பாடல் வீடியோ கோவிந்த் வசந்தா இசையில் ஒரு சூப்பர் ரொமாண்டிக் பாடலாக வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியிருக்கிறார்.

Fight Club படம் வரும் டிசம்பர் 15 தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Fight Club - Yaarum Kaanadha Video Song | Vijay Kumar | Govind Vasantha | Abbas A Rahmath

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விரைவில் இன்சூரன்ஸ் : கார், பைக் உரிமையாளர்களுக்கு ஆறுதல் செய்தி!

IPL2024: ஹர்திக் மாதிரி அவரும் வேணும் அடம்பிடிக்கும் மும்பை… கொந்தளிக்கும் குஜராத் டைட்டன்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share