உறியடி 1 & 2 ஆகிய படங்களை இயக்கி நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஜய் குமார் . தற்போது இவர் Fight Club படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை அப்பாஸ் ஏ ரஹ்மான் இயக்கியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் “G Squad” நிறுவனம் மற்றும் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து Fight Club படத்தை தயாரித்துள்ளது.
கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் நேற்று (டிசம்பர் 11 ஆம் தேதி) Fight Club படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. “ராவணமகன்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பாடலை எழுதி பாடியிருக்கிறார் அறிவு. ராவணமகன் பாடல் ஒரு பக்கா மாஸ் பாடலாக வெளியாகி இருக்கிறது. இன்று ( டிசம்பர் 12) ராவணமகன் பாடல் யூடியூப்பில் டிரெண்டிங் நம்பர் 8ல் உள்ளது.
Fight Club படம் வரும் டிசம்பர் 15 தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஓடும் ரயிலில் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது!
”நான் ஏன் தலைமறைவாகனும்?” : நேரில் ஆஜரான ஆர்.கே.சுரேஷ் கேள்வி!
’சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் பிறந்தநாள் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
