பிஃபா உலக கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி 100 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலக அளவில் கால்பந்து போட்டிகளுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
அந்த வகையில் இந்திய கால்பந்து அணி சுனில் சேத்ரி தலைமையில் விளையாடி வருகிறது.
இதனிடையே, இந்திய கால்பந்து அணி விளையாடிய கடந்த 8 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட பெறவில்லை. அந்த வகையில் 7 போட்டிகளில் வெற்றியும் ஒரு போட்டியில் ட்ராவும் பெற்றிருந்தது.

அதேநேரம் இந்திய அணி விளையாடிய இந்த 8 போட்டிகளிலும் எதிரணியை ஒரு கோல் கூட அடிக்கவிடவில்லை. மேலும், தற்போது பெங்களூருவில் நடைபெற்று வரும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரிலும் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்ந நிலையில் தான் பிஃபா உலக கால்பந்து தரவரிசை பட்டியலில் இந்திய அணி 1204.90 புள்ளிகளுடன் 100 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
1996 இல் 94 வது இடத்திலும், 1993 இல் 99 வது இடத்திலும் , 2017 முதல் 2018 வரை 96 வது இடத்திலும் இந்திய அணி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வாட்சப் டிபி: மகளிர் ஆணைய தலைவிக்கு குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர் கண்டனம்!
