உடல் எடையைக் குறைக்க பெரும்பாலும் உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன. உணவு வழியில் எடையைக் குறைக்க பல்வேறு புதிய ‘டயட்‘ வழிகளை நீங்கள் கடைபிடித்திருப்பீர்கள். ஆனாலும் எடை குறையவில்லையா? கவலை வேண்டாம். உடல் எடையை வேகமாகக் குறைக்கும் காய்கறிகள், கீரையுடன் சேர்த்து செய்யக்கூடிய ஐந்து ஜூஸ் வகைகளை பார்க்கலாம்
ஆப்பிள், கிவி மற்றும் பசலைக் கீரை
ஆப்பிள், கிவி மற்றும் பசலைக் கீரை ஆகியவற்றை புத்துணர்ச்சி தருவதோடு உடல் எடையை கணிசமாக குறைக்க உதவுகிறது. ஆப்பிள்களில் அதிகளவு நார்ச்சத்துடன் பெக்டின் நிறைந்துள்ளது. இது வயிற்றைச் சுற்றியுள்ள உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைக்க நமக்கு உதவுகிறது. ஆப்பிள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க வழிவகுக்கும். மறுபுறம் கிவியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஆக்ஸிஜனேற்றத்திற்கு உதவுகிறது. பசலைக் கீரை குறைந்த கலோரிகளைக் கொண்ட அதிக நார்ச்சத்துள்ள உணவாகும். இந்த மூன்றையும் ஜூஸாக செய்து குடிப்பது உடல் எடை குறைப்பிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
வெள்ளரிக்காய் மற்றும் இஞ்சி
வெள்ளரிக்காய் மற்றும் இஞ்சி அரைத்து ஜூஸ் ஆக குடிப்பது உடல் எடையை குறைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளரிக்காய், இஞ்சி ஜூஸ் குடிப்பது வயிற்றில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க உதவுகிறது. வெள்ளரிக்காயில் அதிகளவு நார்ச்சத்து, குறைந்த கலோரி இருப்பதால் எடை குறைப்புக்கு சிறந்ததாக உள்ளது.
சுரைக்காய் ஜூஸ்
சுரைக்காயை ஜூஸாக குடிக்கலாம் அல்லது வேகவைத்து சமைத்தும் சாப்பிடலாம். ஆயுர்வேத மருத்துவத்தின்படி, சுரைக்காயில் கலோரிகள் குறைவாகவும், அதிக நீர்ச்சத்தும் உள்ளது. இது உடலை நச்சு நீக்கி நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. சுரைக்காய் சாற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது.
கீரை, வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு
கீரை வகைகள் மற்றும் வெள்ளரிக்காய் நம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். எனவே பசியை தூண்டுவது குறைவதால் உடல் எடை குறைப்புக்கு நல்ல தீர்வாக உள்ளது. வெள்ளரிக்காய் மற்றும் கீரையை ஜூஸாக சாப்பிடுவது மேலும் நமக்கு நன்மை. எலுமிச்சை சாறில் வைட்டமின் சி இருப்பதால் அது உடலின் கொழுப்பை எரிக்கும் திறனை அதிகரிக்கிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்கள் இந்த ஜூசை பருகினால் பிட்டாக மாறுவதோடு, உடல் எடையும் சீராக குறையும்.
ஆப்பிள் மற்றும் வெள்ளரி ஜூஸ்
வெள்ளரிக்காயுடன் ஆப்பிளை சேர்த்து ஜூஸாக கலந்து சாப்பிடுவது சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், அதன் கொழுப்பை எரிக்கும் திறனையும் அதிகரிக்கிறது. முன்னர் குறிப்பிட்டது போலவே ஆப்பிள் நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் வயிறு நிறைவை ஊக்குவிக்கின்றன. அதே நேரத்தில் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.
இந்த ஜூஸ் புத்துணர்வை ஏற்படுத்துவதால் உடற்பயிற்சிக்குப் பிறகு ஒரு சிறந்த பானமாகவும் இருக்கலாம்.
