தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அவர் “வங்கக்கடலில் நிலைத்திருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது தொடர்ந்து நாளை மேற்கு – வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும். அதனை தொடர்ந்து தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு, மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டின மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.
புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், திருவள்ளூர் தொடங்கி புதுக்கோட்டை வரையில் சில இடங்களிலும் நாளை அதி கனமழை பெய்யும்.
தற்போதைய நிலவரப்படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழக கடற்கரையிலிருந்து 150 கி.மீ இருந்து 200 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
நாளை உருவாகும் இருக்கும் புயல் எந்த இடத்தில் கரையைக் கடக்கும் என்பதை கணித்துத்தான் சொல்ல முடியும்” என்றார்.
இந்த புயல் உருவானால் அதற்கு சவுதி அரேபியா வழங்கியுள்ள ‘ஃபெங்கல்’ என்று பெயரிடப்படும். அரபி மொழியில் ஃபெங்கல் என்பது, பன்முகத்தன்மை கொண்ட மொழி மற்றும் கலாச்சார அடையாளத்தை குறிக்கிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தாழ்த்தப்பட்ட மாணவனின் புத்தகத்தில் சாதிப் பெயரை எழுதிய ஆசிரியர்… பின்னணி என்ன?
ரெட் அலர்ட் : ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
முதல்வரை தரம் தாழ்த்தி பேசுவதா? : சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!