ஜெயிலுக்கு போயும் திருந்தாத ’ரஞ்சிதமே’ டான்ஸ் மாஸ்டர்… மற்றொரு பாலியல் வழக்கு பாய்ந்தது!

Published On:

| By Kumaresan M

வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ உள்ளிட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்த பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி என்கிற ஷேக் ஜானி பாஷாவுக்கு எதிராக இளம் நடனக் கலைஞர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு , தமிழில் முன்னணி நடன இயக்குநராக அறியப்படும் ஜானி மாஸ்டர் கடந்த சில ஆண்டுகளாக ஏகப்பட்ட ஹிட் பாடல்களுக்கு நடனங்கள் அமைத்துள்ளார்.

ADVERTISEMENT

நடிகர் விஜய்யின் பீஸ்ட், வாரிசு படங்களுக்கு நடனம் இவர்தான் அமைத்தார். குறிப்பாக, ரஞ்சிதமே பாடல் செம ஹிட் அடித்தது. திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருதையும் ஜானி மாஸ்டர் வென்றார்.

ஜானி மாஸ்டர் டீமில் பெண் நடனக் கலைஞராக இருந்த பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனியாக நடன இயக்குநராகவும் இயங்கி  வருகிறார்.   21 வயதான அவர் ஜானி மாஸ்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஹைதராபாத், சென்னை, மும்பை என ஷூட்டிங் சென்ற இடங்களில் எல்லாம் ஜானி மாஸ்டர் தன்னை  பாலியல் பலாத்காரம் செய்ததாக தன் புகாரில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதையடுத்து, நர்சிங்கி  காவல் நிலையத்தில் ஜானியின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து, தெலங்கானா மாநில பெண்கள் பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி ஷிகா கோயல், தெலுங்கு சினிமாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு நடனக் கலைஞர் சதீஷ் என்பவர் அளித்த பாலியல் புகார் காரணமாக 6 மாதங்கள் ஜானி மாஸ்டர் சிறையில் இருந்துள்ளார். அடிக்கடி தெலுங்கு சினிமாவில் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

”விசிக நடத்தும் மதுவிலக்கு மாநாட்டில் அரசியல் இருக்கிறது” : செல்வப்பெருந்தகை

ஓணம் கொண்டாட்டம் : குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share