சத்குரு
கேள்வி : ஒரு தரிசனத்தில் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்றால், என்னை நடத்துவது போல எல்லாவற்றையும் நடத்தவேண்டும் என்று சொன்னீர்கள். நீங்கள் கருணாவதாரம், ஆனால் என்னுடைய வீட்டில் இரக்கமில்லாத ஒரு ஜந்து இருக்கிறது. அவரிடம் நான் உங்களைப் பார்ப்பது கடினமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது?
பதில்
எத்தனை ஆண்டுகள் கழிந்த திருமணத்தில், இந்த பரிணாம வளர்ச்சி நடக்கிறது? இல்லை, ஒருவேளை பரிணாம வளர்ச்சி பின்னோக்கி நடக்கிறதா? இவர் ஒரு சமயத்தில், நிச்சயம் ஒரு அற்புதமான, காதலான மனிதராக இருந்திருப்பார்.
எத்தனை ஆண்டு திருமணத்திற்கு பிறகு இவர் மிகவும் மோசமான ஜந்துவாக மாறினார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் அப்படி மாறியதில், உங்களுடைய பங்களிப்பு எவ்வளவு என்றும் தெரியவில்லை. குறிப்பாக, அவர் ஒரு மோசமான ஜந்துவாக இருந்தால், அது உங்களுடைய புரிதல். உங்கள் வீட்டில், உங்கள் அலுவலகத்தில், எங்கே இருந்தாலும், இப்படி ஒருவர் இருப்பாரென்றால், நீங்கள் அவரை ஒரு குறிப்பிட்ட விதமாக பார்ப்பது, அது அவர்களைப் பற்றியது இல்லை, உங்களைப் பற்றியது.
உங்கள் வாழ்வின் உச்சநிலை எது? உங்களுடைய உடல், மனம், உணர்வு இதை எல்லாம் இனிமையாக வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா அல்லது கசப்பாக வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? இதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அந்த மோசமான ஜந்து கூட என்னைப் போலதான் என்று பாருங்கள். அவருடைய போதனைகளை கேளுங்கள் என்றோ, அவர் கூறும் பயிற்சிகளை செய்யுங்கள் என்றோ நான் சொல்லவில்லை.
நான் சொல்வதெல்லாம், நீங்கள் என்னை ஒருவிதமான மதிப்பு மரியாதையோடு, பக்தியோடு, அன்போடு என்று உங்கள் உணர்ச்சி எதுவாக இருந்தாலும், அந்த உணர்வோடு நீங்கள் பார்த்திருந்தால், அனைத்தையும் அதே உணர்வோடு பாருங்கள் என்று சொல்கிறேன்.
உங்களுக்கு என்று ஒரு உடல், மனம், உணர்ச்சி, சக்தி இவை எல்லாம் இருக்கின்றன. உங்களது உணர்ச்சி நிலையைப் பற்றி நாம் இப்பொழுது பேசிக்கொண்டு இருக்கிறோம்.
நீங்கள் உங்கள் உணர்ச்சியளவில், ஒரு இனிமையான நிலையை எட்டினால் அதுவே உங்கள் வாழ்வின் உச்ச நிலை. அன்பு, பக்தி, கருணை, இப்படி ஏதோ ஒன்றின் மூலமாக நீங்கள் அதை எட்டினால் அதில் இருந்து நீங்கள் கீழே இறங்கக்கூடாது. அதையும் தாண்டி எப்படி மேலே உயர்வது என்று பார்க்க வேண்டும்.
நான் என்ன சொல்கிறேன் என்றால், உங்களுக்கு இருந்த மிகவும் உயர்ந்த இனிமையான உணர்ச்சி எதுவோ அதை அடிக்கோடாக்க வேண்டும். ஏன் அதில் இருந்து கீழே வருகிறீர்கள்? ஒருவேளை அதுபோன்ற ஒரு உணர்வு உங்களிடம் இல்லையென்றால், நான் உங்களுக்கு என்ன சொல்வேன்? உங்கள் வாழ்வில் நீங்கள் உணர்ந்திருக்கும் மிகவும் இனிமையான உணர்ச்சி என்னவென்றால் அது உங்களுடைய குழந்தை.
சரி, எல்லாவற்றையும் உங்கள் குழந்தையாக பாருங்கள் என்று சொன்னோம். ஒரு சமயத்தில் அதை உங்களிடம் சொன்னோம். பின்னர் நான் பார்க்கும்போது, இங்கு நீங்கள் என் முன்னே உட்கார்ந்தபொழுது பரவச கண்ணீரோடு, அன்பு கலந்த கண்ணீரோடு உட்கார்ந்து இருந்தீர்கள். அப்போது நான், நீங்கள் இப்பொழுது என்னை எப்படி பார்க்கிறீர்களோ, அதேபோல் எல்லாவற்றையும் பாருங்கள் என்று சொன்னேன். ஏனென்றால், இது உங்கள் உடல், மனம், உணர்ச்சி, உங்கள் உயிரையே இனிமையாக, அற்புதமாக மாற்றும். இது அவரைப் பற்றியது இல்லை.
அவர் கடினமானவராக இருக்கிறார் என்றால், உங்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நரகத்துக்கு போனாலும் அற்புதமாக இருப்பீர்கள், ஆமாம். ஏனென்றால், யாரும் உங்களுக்கு இந்த உத்தரவாதம் வழங்கவில்லை.
நான் உங்களுக்கு, சொர்க்கத்திற்கு டிக்கெட் வாங்கி தருகிறேன் என்று சொல்லியிருக்கிறேனா? நான் உங்களை தொடர்ந்து அச்சுறுத்தியிருக்கிறேன். எல்லாமும் உங்களுக்கு இங்கேயே நடக்கும் என்று சொல்லியிருக்கிறேன்.
இது உங்களுடைய தன்னிலை மாற்றம் என்று புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் டீன் ஏஜ் சமயத்தில் நீங்கள் வாசித்த காதல் கதைகள், அதில் வரும் விஷயங்களை கற்பனை
செய்தீர்கள்.
முதலில், உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இல்லை. உங்கள் ஹார்மோன்கள் வேலை செய்கின்றன. திடீரென்று யாரையோ பார்த்தால், அவர் அற்புதமாக தெரிவார். அவர் அழகாக இருக்கிறார். அவர் அற்புதமாக இருக்கிறார். அனைத்தும் செய்கிறார் என்று உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
இல்லை இல்லை, அவர் என்ன செய்தாலும் சரி, உங்களை நீங்கள் அழகாக மாற்றிக் கொண்டால், இப்பொழுது அவர் மோசமான விஷயங்கள் செய்தாலும் நீங்கள் அற்புதமானவராக இருப்பீர்கள், இது வேறு.
அவர் மோசமான விஷயம் செய்கிறார் என்று உங்களுக்கு தெரியும், அப்போதும் நீங்கள் அற்புதமாக இருந்தால், இது அற்புதமானது. அவர் மோசமான விஷயம் செய்யும்போது, அழகான விஷயங்கள் செய்வதாக நீங்கள் நினைத்தால், இது முட்டாள்தனமான அபத்தம்.
கர்மா என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? – சத்குரு
முதல்வரைச் சந்திக்கும் வரை போராட்டம் தொடரும்: ஆசிரியர் சங்கம்