தொழிலில் சிறக்க எந்தக் கடவுளைக் கும்பிடலாம்?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

சத்குரு

கேள்வி

நமஸ்காரம் சத்குரு, நான் கடவுள் பக்தி உள்ளவன். பல வருடங்களாக வியாபாரமும் செய்து வருகிறேன். என் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக எந்தக் கடவுளைக் கும்பிடலாம்?

பதில்

சொன்னால், அந்தக் கோயிலுக்குப் போவீர்கள். அங்கே கடவுளிடம் நேரடியாகப் பேச உங்களுக்குத் தெரியாது. அங்கே இருக்கும் பூசாரியை கடவுளின் ஏஜென்ட்டாக நினைப்பீர்கள். பத்து ரூபாய் கொடுப்பீர்கள். உங்கள் பெயர், நட்சத்திரம், முகவரி எல்லாம் சொல்லி அந்த ஏஜென்ட் கடவுளைக் கூப்பிடுவார்.

‘இந்தப் புத்திசாலி உன்னை நம்பிப் பத்து ரூபாய் செலவு செய்திருக்கிறான். இவன் பிஸினஸைப் பார்த்துக் கொள்’ என்றால் கடவுள் வருவாரா? இங்கே இருக்கும் அடி முட்டாள்கூட நீங்கள் கொடுக்கிற பத்து ரூபாய்க்காக உங்கள் பிஸினஸைப் பார்த்துக் கொள்ள மாட்டார். நீங்கள் மழித்துப் போடுகிற தலைமுடிக்காகவும், உண்டியலில் போடுகிற சில்லறைக் காசுகளுக்காகவும் காலம்பூராவும் உங்களைப் பார்த்துக் கொள்ள கடவுள் என்ன இளிச்சவாயரா?

என்னவொரு அற்புதமான இயந்திரமாக மனிதனைப் படைத்து உலகுக்கு அனுப்பியிருக்கிறார்? அவர் செய்ய வேண்டியதை எல்லாம் செவ்வனே செய்து முடித்துவிட்டார். இனி, மகனே உன் சமர்த்து!

உங்கள் திறமைகளை முன்வைத்து மைதானத்தில் நீங்கள் இறங்க வேண்டிய நேரம் இது. இப்போதும் கடவுளைக் கூப்பிட்டால் என்ன அர்த்தம்? கோடி ரூபாய் கொடுத்தாலும், உங்களுக்காகக் கடவுள் தன் சுண்டு விரலைக்கூட நகர்த்த மாட்டார்.

கவனித்துக் கொள்ள உங்களுக்குத் துப்பில்லை என்றால், அந்தத் தொழில் உங்களுக்கு எதற்கு?

இயற்கையில் எல்லா உயிர்களுமே தங்கள் இயல்புப்படி முழுமையாகத்தான் இருக்கின்றன. மனிதன் மட்டும்தான் சிதைந்து கிடக்கிறான்!

குடும்பத்தையே தோள் மீது சுமப்பதாக நினைத்து நினைத்து துக்கத்துடன் வேலை செய்பவர்களுக்கு எந்த ஆசை நிறைவேறும்?

கேள்வி

ஆனால் நான் என்னதான் கடவுளைக் கும்பிட்டாலும், நான் கேட்பது எதுவுமே கிடைப்பது இல்லையே?

பதில்

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். படைப்பில் எந்தச் சக்தியும் உங்களுக்கு எதிராக இல்லை. அதை நீங்கள் கையாள்வதில்தான் அது ஆக்கப்பூர்வமாகவோ, அறிவுப்பூர்வமாகவோ மாறுகிறது.

ஒருநாள் அதிகாலையில் சூரியன் உதிப்பதைப் புகைப்படம் எடுக்க நினைக்கிறீர்கள். அன்று பார்த்து வானம் பொத்துக் கொண்டு மழை பெய்கிறது. உங்கள் எண்ணம் ஈடேற முடியாமல் போனதை நினைத்து, உலகத்தின் மீதே கோபித்துக் கொண்டு சோர்வாக அறை மூலையில் முடிங்கிக்கிடந்தீர்கள் என்றால், உங்களுக்காகப் பரிதாப்பட்டு இயற்கை தன்னை மாற்றிக் கொள்ளுமா?

அதை விடுத்து, மழையை ஆர்வத்துடன் கவனியுங்கள். ஒருவேளை, அற்புதமான வானவில்லைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கலாம். கிடைத்தற்கரிய புகைப் படமாகவும் அது அமையலாம். அப்படியே இல்லையென்றாலும், குவிந்து போயிருக்கும் வீட்டு வேலைகளைச் செய்து முடிக்க உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரமாக அதை ஏற்றுக் கொள்ளலாமே.

உங்களை மீறிய சக்திகளால், நீங்கள் செய்ய நினைத்ததைச் செய்ய இயலாமல் போகலாம். ஆனால், செய்யக்கூடியதையும் செய்யாமல் சோர்ந்து கிடப்பது, பைத்தியக்காரத்தனம் அல்லவா?

கடவுள் எங்கேயோ இல்லை. இங்கேதான் இருக்கிறார். நீங்கள்தான் அவரைக் கவனிக்காமல், எப்போதும் எங்கேயோ இருக்கிறீர்கள்.

நீங்கள் நினைத்தபடி உலகம் நடக்க வேண்டும். மற்றவர்கள் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உங்கள் அகங்காரம் வீண் சுமை!

மனச்சோர்வு என்பது உள்ளிருந்து கொண்டே, கீறிக் கிழித்து, உபயோகமில்லாமல் அழித்துவிடும் விஷ ஆயுதம்!

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…

ஞானமடைய எப்படி நேரம் ஒதுக்குவது?

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

1 thought on “தொழிலில் சிறக்க எந்தக் கடவுளைக் கும்பிடலாம்?

  1. எல்லாரும் ஜக்கி மாதிரி அறிவாளி இல்லையே. நோகாமல் அடுத்தவனுக்கு அறிவுரை சொல்வதற்கு… மக்களிடம் அவர்கள் நிலைக்கு இறங்கி வந்து அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கூறுவது தான் உங்களைப் போன்றவர்களுக்கு அழகு….

Leave a Reply

Your email address will not be published.