சத்குரு
சிலகுறிப்பிட்ட அமெரிக்க பூர்வக்குடி கலாச்சாரங்களில், இறந்தவர்களின் ஆன்மாக்கள் வெள்ளை நதியாகிய பால்வெளியின் வழியில் ஒரு பயணம் மேற்கொள்வதாக அவர்கள் நம்புகின்றனர். பிற்காலத்தில் ‘மூளையை எடுப்பவர்’ என்று அழைக்கப்பட்ட ஒரு உயிரால் காக்கப்பட்ட நதியில், ஒரு நீண்ட மரத்துண்டு மீது கடந்து செல்வதுதான் இதற்கான ஒரே பாதையாக உள்ளது.
சூட்சும உடல் நகர்வதற்கு முயற்சிக்கும் பொழுது தோன்றும் இந்த நதியின் உருவகம் பூமியின் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இருக்கிறது. ஒரு ஆத்மா அல்லது இறந்துவிட்டவர் பால்வெளியைக் கடப்பதற்கு முயற்சிக்கும் பொழுது, ஒரு பெண் தெய்வமானது நாய் ஒன்றின் குரைப்பொலியினால் எச்சரிக்கப்பட்ட பிறகு, அவள் ஆன்மாவைத் தேடிக்கொண்டு செல்வதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதைச் செய்துமுடிப்பதற்கு, அவள் ஒரு கைத்தடியைக் கொண்டு தலையிலுள்ள ஒரு துவாரத்தைத் தட்டக்கூடும். ஏற்கனவே தலையில் உள்ள ஒரு துவாரம் பல வகையிலும் பிராணமய கோஷத்தைப் பிணைக்கும் முடிச்சாக செயல்படுகிறது. இந்த திருவுருவம் தலையில் தட்டுவது முக்திக்காகத் தானே தவிர, தீங்கு ஏற்படுத்த அல்ல. இருப்பினும், பலரும் விடுதலை குறித்து அஞ்சுவது ஏனென்றால், அது இல்லாமல் போவதற்கு இணையானது.
இருத்தல் இல்லாமைதான் விடுதலைக்கான ஒரே வழியாக உள்ளது, ஏனென்றால் இருத்தல்தான் எல்லா பிணைப்புக்கும் ஆதாரமாக உள்ளது. பரு உடலில் இருந்தாலும் அல்லது சூட்சும உடலில் இருந்தாலும் அது கடினமான ஓடாகவும், பிணைப்பின் வடிவமாகவும் உள்ளது. ஆதலால் இருத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் விடுதலை. இது மக்களிடத்தில் அச்சத்தைத் தூண்டுகிறது, இந்தக் காரணத்தினால் தான் அந்தக்குறிப்பிட்ட திருவுருவத்தினால் அவர்கள் அச்சத்துக்கு ஆளாகிறார்கள். அவர்களை அவள்விடுவிப்பதற்கு முனையும் போதிலும், மக்கள் அஞ்சும்படியாக விடுதலை என்பது, நிரந்தரமான அழித்தலாகவும் பார்க்கப்படுகிறது.
ஒருவர் இதன்வழியே பயணித்து, இந்த நதியை எப்படிக் கடக்கமுடியும்? கலாச்சார ரீதியாக, ஒரு நதி மற்றும் ஒரு நாய் என்கிற இந்தக் கருத்தாக்கம், யோகக்கலாச்சாரம் உள்ளிட்ட எல்லாக் கலாச்சாரங்களிலும் பரவலாக உள்ளது. நான் எனது சொந்த அனுபவத்திலிருந்து பேசியபிறகு பல்வேறு கலாச்சாரங்களை விவாதிக்கமாட்டேன். என் சொந்த அனுபவத்தில், உடலை நீங்கும் பொழுது, நீங்கள் இருக்கும் பரிணாம நிலையைப் பொறுத்தும், உங்கள் வெளிப்புற ஓடு எவ்வளவு மெல்லியதாக அல்லது அடர்த்தியாக இருக்கிறது என்பதற்கு ஏற்பவும் விஷயங்கள் நிகழும். உங்கள் ஓடு அல்லது உங்களது குமிழி மிகவும் அடர்த்தியாக இருந்தால், அது உடையமுடியாமல், நதியிலிருந்து மீண்டும் திரும்பிவிடும்.
நதி என்பது என்ன?
இந்த புராணம் சார்ந்த நதி என்பது, வாழ்வும் இல்லாத மரணமும் இல்லாத முற்றிலும் வித்தியாசமான ஒரு சக்தியாக உள்ளது. அதனை விளக்குவதற்கு போதுமான வார்த்தை இல்லாமையால், அது உங்களைப் பாதுகாத்து, கரைத்திடும் ஒரு விதமான சக்தி என்று நாம் கூறலாம். இந்த சக்தி ஓட்டம் ஒரு உருவக வெளிப்பாடாக இருக்கிறது, அது ஒரு பருப்பொருளான நதியல்ல. யோகப்பாரம்பரியத்தில் இது வைதாரணி என்று அழைக்கப்படுகிறது. உடலை நீங்கியபிறகு, ஒவ்வொரு உயிரும் இயற்கையாகவே இந்த நதியை நோக்கி நகர்கிறது. சில உயிர்கள் திரும்பி விடும், சில உயிர்கள் அதில் நனையும், சில உயிர்கள் அதை எளிதில் கடந்துவிடும், மற்றும் சில அங்கேயே கரைந்து விடுகின்றன.
இது பல்வேறு அம்சங்களைச் சார்ந்திருக்கிறது. அதைப்பற்றிய விளக்கங்களுக்குள் நான் செல்லமாட்டேன். ஏனென்றால் எல்லா கலாச்சாரங்களும் அதை எப்படி ஒரே விதமாக நோக்கின என்பதை நாம் காண விரும்புகிறோம். புராணங்களில் விவரிக்கப்படும் இந்த நதி, உயிராகவும் இல்லாத மரணமாகவும் இல்லாத முற்றிலும் மாறுபட்ட ஒரு சக்தியின் ஓடை. ஒவ்வொரு கலாச்சாரத்திலும், அதனை அனுபவித்துணர்ந்த தனிமனிதர்கள் இருந்தனர், மற்றும் அந்த அனுபவம் குறித்த விளக்கங்கள் பல்வேறு வழிகளில் கட்டமைக்கப்பட்டன.
சில அமெரிக்க பாரம்பரியங்களில், நீங்கள் நிரந்தரமாக அழிக்கப்படும் விதத்தில் அல்லது விடுவிக்கப்படும் விதத்தில், ஒரு பெண் தெய்வமானது உங்கள் தலையில் ஒரு துவாரத்தை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாக இருக்கிறது.
ஜப்பானிய புராணக்கதையில், புதிதாக இறந்த ஆன்மாக்கள் ஸான்சுநதி அல்லது மூன்று குறுக்கு வெட்டுகளின் நதியைக்கடப்பதற்கு முயற்சிக்கின்றன. வாழ்க்கையில் நல்லவிஷயங்களைச் செய்த ஆன்மாக்களுக்கு அங்கே ஒரு பாலம் இருப்பதாக புராணம் கூறுகிறது – அவர்கள் நதியைக் கடப்பதற்கு நடந்து செல்லமுடியும்.
ஓரளவுக்கு நல்லவர்களாக இருந்தவர்களுக்கு அங்கே ஒரு படகு இருக்கிறது – அவர்கள் படகில் செல்லலாம் அல்லது நதியின் ஆழமற்ற இடங்களில் சற்று சிரமத்துடன் நடந்து செல்ல முடியும். மோசமாக வாழ்ந்திருந்த மக்கள் ஆடைகள் அகற்றப்பட்டு, சர்ப்பம் நெளியும் ஆழமான நீரில் நீந்திச்சென்று கடப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். அந்த உயிரானது நதியைக் கடந்து விட்டால், ஒரு அரூபியானது, ஆன்மாவின் அனைத்தையும் நீக்கிவிடுகிறது.
ஆடைகளின் அல்லது சேகரிக்கப்பட்ட குவியல்களின் சுமை என்பது அவர்கள் செய்திருந்த மோசமான செயல்களின் அளவை பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது. உண்மையில் இது நல்லது, கெட்டது குறித்த கேள்வி அல்ல, அது கர்மவினைக் குவியலின் அளவு எனப்படுகிறது. தொழில் நுட்பரீதியாக கூறவேண்டுமென்றால், கர்ம உடலின் வலிமை அல்லது அளவுதான் இதனைத் தீர்மானிப்பதாக உள்ளது.
கிரேக்க மற்றும் ரோமானிய புராணக்கதையில், புதிதாக இறப்பெய்திய ஆன்மாக்கள் ஸ்டைக்ஸ் நதியைக் கடப்பதற்கு படகில் அழைத்துச் செல்லப்படுவதாகவும், இந்த நதியானது வாழ்ந்து கொண்டிருப்போரின் உலகையும், இறந்தவர்களின் உலகையும் பிரிப்பதாகக் கூறப்படுகிறது. எகிப்து கலாச்சாரத்திலும் இதே போன்ற நம்பிக்கைகளைக் காணமுடிகிறது.
இந்த கருத்தாக்கங்கள் எல்லாக் கலாச்சாரங்களிலும் இருக்கும் காரணத்தால், அப்படிப்பட்ட அனுபவங்கள் வாய்த்திருந்த யாரோ ஒருவர் எப்போதும் அங்கு இருப்பார். இந்தத் தனிமனிதர்கள் அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது, எப்போதும் மற்றவர்கள் எளிமையான தீர்மானங்களைச் செய்து கொண்டு, அவர்களுடைய சொந்த பொருள் விளக்கங்களை உருவாக்குகின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால், நீங்கள் ஒரு தட்டுதலுக்கு ஆளானால், உங்களால் விடுதலை பெறமுடியும் என்பதை கலாச்சாரம் தெளிவாக அறிந்திருந்தது.
விடுதலை, நிர்வாணா, அல்லது முக்தியைப் போன்றே அது நிரந்தரமான அழித்தலாக விவரிக்கப்படுகிறது. உங்களுக்கு தட்டுதல் கிடைத்தால், நீங்கள் விடுதலை அடைகிறீர்கள், நீங்கள் நிர்வாணம் எய்துகிறீர்கள். நிர்வாணா என்றால் உங்களது இருத்தல் முடிவடைகிறது. முக்தி என்றால், இருத்தலின் பிடிப்புகளிலிருந்தே நீங்கள் முழுமையாக விடுபடுகிறீர்கள். நிர்வாணா என்றால் உங்களது இருத்தல் முடிவடைகிறது. முக்தி என்றால், இருத்தலின் பிடிப்புகளிலிருந்தே நீங்கள் முழுமையாக விடுபடுகிறீர்கள்.
பல அமெரிக்க பூர்வக்குடிகளின் மயானங்களில், இறந்த உடல்கள் மரங்களில் அல்லது சாரக்கட்டுகளில் வைக்கப்பட்டன. இந்த இடங்களில் யாரும் நடப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. உறுதியாக, சில குறிப்பிட்ட உயிர்களை நேர்மறைச் செயல்களுக்குப் பயன்படுத்துவதற்காக, அவற்றை அவர்கள் பராமரிக்கின்றனர். பல்வேறு பலியிடல்களுக்கும், ஆரோக்கியம், வளம் மற்றும் ஆன்மீக நல்வாழ்வு போன்றவைகளை ஊக்குவிப்பதற்காகவும் வெவ்வேறு விதமான பணிகளுக்கு இந்தசக்திகள் பயன்படுத்தப்படமுடியும்.
அத்தகைய விஷயங்கள் மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டதில் காசி ஒரு இடமாக இருந்தது, ஆனால் அங்குகூட, ஒவ்வொன்றுக்கும் அரசாங்க அனுமதி தேவைப்பட்டது. பௌதிக உடல் தாண்டிய சூட்சுமமான இந்த எல்லா செயல்முறைகளும், கலைகளும், அல்லது அறிவியல்களும், பருப்பொருள் முக்கியமில்லாத எந்த ஒரு விஷயமும், ஒரு அறிவியலாகக் கருதப்படாதது துரதிருஷ்டவசமானது.
ஏதோ ஒருவிஷயம் அறிவியல் என்று கருதப்பட வேண்டுமென்றால், அது A கூட்டல் B என்பது C ஆக இருக்கவேண்டும் என்பதைப் போன்ற ஒரு இடத்திற்கு நாம் உலகத்தைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளோம். A மற்றும் B யை கூட்ட முடியாதென்றால், அல்லது A மற்றும் B யின் கூட்டுத்தொகை ஒரு பெரிய A என்று தான் ஆகிறது என்றால், அது இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால், அதுதான் இருத்தலின் இயற்கையாக உள்ளது என்பதுடன் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த அளவுக்கு உயிரின் ஆராய்ச்சி நிகழ்ந்துள்ளதைக் காண்பதற்கு அற்புதமாக உள்ளது.
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: விஜய் புது கட்சி… ஸ்பெயினுக்கு சென்ற ரிப்போர்ட்!
இன்று நேற்று நாளை 2 என்ன ஆச்சு? விஷ்ணு விஷால் பதில்!
அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கு ரத்து!
சரி.. இனி யாரு தளபதி? : அப்டேட் குமாரு