மணியன் கலியமூர்த்தி
உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகவும் மற்றும் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியாவின் வளர்ச்சி உள்நாட்டு நுகர்வோருடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. இது நாட்டின் முன்னேற்றத்தை அளவிடுவதில் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது.
நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மின் துறையைச் சேர்ந்த பவர் ஃபைனான்ஸ் கார்பரேஷன் நிறுவனம் புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. தேசிய பங்குச்சந்தையில் சுமார் 1,44,232 கோடி சந்தை மூலதனத்தை கொண்டு இயங்கி வருகிறது பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்.
இதன் பங்குகள் கடந்த ஒரே வருடத்தில் 200% வரை லாபம் கொடுத்துள்ளது. நாட்டின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் தங்கள் முதலீட்டாளர்களுக்கு அபரிமிதமான லாபத்தை அளித்து சில்லறை முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் மினி ரத்னா, மகா ரத்னா என இருவகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷ்ஸ் மகா ரத்னா வகையை சேர்ந்தது.
கடந்த வருடம் அதானி குழுமத்தை மையமாக வைத்து அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பெர்க் வெளியிட்ட ஆய்வறிக்கைக்கு பிறகு இந்த மகா ரத்னா மறுமலர்ச்சி பெற்றது.
இந்நிறுவனத்தின் பொருளாதார நடவடிக்கை, மின் நுகர்வு அதிகரிப்பு, மின் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ள இந்நிறுவனத்தின் செயல்பாடுகளே எழுச்சிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிறுவனத்தில் மாநில மின் துறை, மத்திய மின் துறை, மற்றும் தனியார் மின் துறையினர் முக்கிய வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
பவர் ஃபைனான்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் பங்கு தேசிய பங்குச்சந்தை நிஃப்டியில் கடந்த ஒரு வருடத்தில் 200% லாபம் கொடுத்து மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் PFC பங்கு விலை கடந்த 1 வருடத்தில் கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
மே 17 வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தை இன்ட்ராடே வர்த்தகத்தில் இதன் பங்கு விலை பங்கு கிட்டத்தட்ட 3 சதவீதம் உயர்ந்தது. மே 18 சனிக்கிழமை சிறப்பு வர்த்தக அமர்வில் இதன் பங்குகள் தேசிய பங்குச்சந்தை நிஃப்டியில் 457.30 ரூபாய்க்கு தொடங்கி. வர்த்தக முடிவில் 464.90 ரூபாய்க்கு முடிவடைந்து 2.22% லாபத்தை அளித்தது. ஆண்டு சராசரி அடிப்படையில் கடந்த ஒரு வருடத்தில் இதன் பங்குகள் 130.40 ரூபாய் வரை குறைந்தும் 485.5 ரூபாய் வரை உயர்ந்தும் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த ஒரு மாதத்தை கணக்கிடுகையில் பவர் ஃபைனான்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் பங்குகள் 16.62% லாபம் கொடுத்துள்ளது. நான்காவது காலாண்டில் இந்நிறுவனம் மொத்த வருமானமாக 7,556.43 கோடியை ஈட்டியதாகவும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் நீட்டிய 6,128.63 ஒப்பிடுகையில் இது 23.28% அதிகம் என்று தெரிவித்துள்ளது. மேலும், செயல்பாடுகள் மூலம் 24,141.40 கோடி வருவாய் ஈட்டியதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 20.34 சதவீதம் அதிகம் என்று தெரிவித்துள்ளது.
நிதிநிலையைப் பொறுத்தவரை இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக உள்ளது. பவர் ஃபைனான்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் மற்றும் நிகர லாபம் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 10% வரை அதன் CAGR இல் வளர்ந்துள்ளது. நிறுவனம் ஈவுத்தொகையாக (Dividend) ஒரு பங்கிற்கு 2.5 ரூபாயை கூடுதலாக அறிவித்து உள்ளது. முன்னதாக இந்நிறுவனம் இந்த நிதியாண்டில் இதுவரை ஒரு பங்குக்கு 11 ரூபாய் டிவிடெண்ட் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய அறிக்கையின் படி பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 55.99 சதவீத பங்குகளை இதன் புரமோட்டர்களும் 18.21 சதவீத பங்குகளை உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் (DIIs), 17.19 சதவீத பங்குகளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் (FIIs) 17.19, மீதி உள்ள 8.58 சதவீத பங்குகளை சில்லறை முதலீட்டாளர்கள் வசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் தேவைகள் அடிப்படையில் எதிர்காலத்தில் மின் தேவைகள் முக்கிய இடத்தில் இருக்கும் . எனவே மின் தேவைகளை பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு. நிதியளிக்கும் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகள் நீண்ட கால மற்றும் குறுகிய கால முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள் என்று பங்குச்சந்தையில் பல்வேறு தரகு நிறுவனங்கள் இந்த பங்குகளை பரிந்துரை செய்கின்றன.
முக்கிய அறிவிப்பு!
பங்குச்சந்தை முதலீடுகள், முதலீட்டு அபாயத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்பு திட்டம் சார்ந்த ஆவணங்களையும்; முதலீட்டு ஆலோசகர்களின் வழிகாட்டலை பெறுவது நல்லது. முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை பற்றிய விழிப்புணர்வுக்காக எழுதப்பட்டது இந்த கட்டுரை.
கட்டுரையாளர் குறிப்பு:
மணியன் கலியமூர்த்தி பிரபல தனியார் வங்கியில் மாநில அளவிலான முக்கிய பொறுப்பில் இருக்கிறார். பங்குச் சந்தை விவகாரங்கள் குறித்து பல வருடங்களாக கட்டுரைகள் எழுதி வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து – காரணம் தெரியுமா?
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு – தமிழக வெதர்மேன்