பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் சாதகமாக நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பார்திவாலா, பேலா திரிவேதி ஆகியோர் தீர்ப்பளித்தனர்.
தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பு அளித்தனர்.
மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதி பட், 10 சதவீத இடஒதுக்கீடு பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முழுமையாக அங்கீகரிக்கவில்லை என கூறியுள்ளார்.

தனது தீர்ப்பில் நீதிபதி பட், அரசியலமைப்பின் சமத்துவக் குறியீட்டை ஆராய்ந்து, அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பில் உள்ளார்ந்த நிலையில் – சமத்துவத்திற்கான இடஒதுக்கீடு என்பது ஒரே குழுவின் பொருளாதார முன்னேற்றத்தைக் குறிக்காது என்பதை தெரிவித்துள்ளார்.
நீதிபதி பட், மிகத் தெளிவாக, தனது தீர்ப்பு ஒரு விதிவிலக்கு என்று குறிப்பிடுகிறார். ஏறக்குறைய 100 பக்க தீர்ப்பிலிருந்து சில குறிப்பிடத்தக்க பகுதிகளை காணலாம்.
அடிப்படை கட்டமைப்பை சீர்குலைக்கிறது
கேள்வி எண். 3 இல் உள்ள 103 வது திருத்தத்தின் செல்லுபடியாகும் தன்மையில் பெரும்பான்மையினரின் கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியாமல் போனதற்கு நான் வருந்துகிறேன். 70 வருட குடியாட்சியில், இந்த நீதிமன்றம் முதன்முறையாக ஒரு வெளிப்படையான விலக்கு மற்றும் பாரபட்சமான கொள்கையை அனுமதித்துள்ளது”
“நமது அரசியலமைப்பு விலக்கிவைக்கும் மொழியைப் பேசவில்லை”
எனது கருத்துப்படி, விலக்கு மொழியின் மூலம் இந்த சட்டத்திருத்தம், சமூக நீதியின் அடிப்படைக் கட்டமைப்பைக் குறைக்கிறது.”
துல்லியமாக எதை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும்
பாரபட்சமான சமூகப் பழக்கவழக்கங்களால் ஏற்படும் இழப்பை அரசு நிவர்த்தி செய்யும் வரையில், நமது மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையிலான மக்களை விளிம்பு நிலையிலேயே வைத்திருப்பதுடன், அரசின் மேம்படுத்தும் கொள்கைகள் மற்றும் சட்டங்களைத் தொடரும் வரை, தேவையின் அடிப்படையிலான உறுதியான நடவடிக்கையை அறிமுகப்படுத்துவது தான், நமது அரசியலமைப்பு இலக்குகளுடன் ஒன்றிச்செல்லும்.
‘ வேறு’ பிரிவை பகுத்தாய்தல்
உட்பிரிவு (6) ஐ அரசியலமைப்பு சட்டத்தின் 15 மற்றும் 16 இல் சேர்ப்பதன் மூலம், ஒரு புதிய வகுப்பை அறிமுகப்படுத்துகிறது. அதாவது, “பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகள்” அவை பிரிவு 15(4) இல் உள்ள வகுப்புகளை “வேறு” என வரையறுக்கப்படுகிறது [அதாவது, பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் உட்பட கல்வியில் பின்தங்கிய வகுப்புகள், இது பிரிவு 16(4) இல் குறிப்பிடப்பட்டுள்ள “பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுடன்” ஒத்துப்போகிறது.]
அரசியலமைப்பு சட்டத்தின் 15(6) மற்றும் 16(6) இல் காணப்படும் “வேறு” என்ற சொற்றொடரை மனுதாரர்கள் அல்லது பிரதிவாதிகள் தரப்பில் படிக்க வேண்டும் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. அந்த ‘விலக்கு’ மறைமுகமானது, ஒப்புக்கொள்ளப்பட்டது – அத்தகைய ‘விலக்கு’ அனுமதிக்கப்படுகிறதா இல்லையா என்பதில் மட்டுமே வேறுபாடு உள்ளது.”
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 17

தீண்டாமையை அனைத்து வடிவங்களிலும் (மதம் அல்லது சாதி பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாமல்) தடைசெய்வதில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் கவலையின் விளைவாக, 17வது பிரிவு கொண்டு வரப்பட்டது, அதில் எது “தீண்டாமை” என்று வரையறுக்கப்படாமல் இருந்தது…”
“…[நான்] இது எனது கருத்தில் கொண்டது, சில மனுதாரர்கள் வாதாடியபடி , சமத்துவக் குறியீட்டின் ஒரு பகுதியாக விளங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 17 க்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை…”
சமத்துவம் பற்றி
“‘பாகுபாடு அற்ற’ மற்றும் ‘வாய்ப்பில் சமத்துவம்’ என்ற இரட்டை உறுதிப்பாட்டின் படி, அனைவருக்கும் அர்த்தமுள்ள சமத்துவம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய அரசைக் கட்டாயப்படுத்துவதாகும்.
இதேபோல், சகோதரத்துவக் கொள்கை ‘அரசு மற்றும் மக்கள்’ என இருவரையும் பிணைக்கிறது. சகோதரத்துவம் அற்ற தனிமனித சுதந்திரம், கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரம் இல்லாமல், ஒன்றுமற்று வெறுமையாக மாற்றப்படுகிறது.”
“காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை என்பது ஒரு ஜனநாயக குடியரசை உருவாக்குவது, அதன் தேசத்தின் தனித்துவமான தோற்றத்தை பிரதிபலிக்கும் செயல்திட்டத்துடன் இருந்தது.
பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், மதங்கள் கொண்ட மக்களை சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் பொதுவான பிணைப்புடன் வைத்திருப்பது, அனைவருக்கும் கண்ணியத்தை உறுதிப்படுத்துகிறது – ஒவ்வொரு தனிநபருக்கும் இவை எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்படுவதை அரசும் மக்களும் உறுதி செய்ய வேண்டும்”

விலக்கிவைத்தலை கட்டுப்படுத்த அரசின் முயற்சிகள்
சமத்துவக் கொள்கை – பாகுபாடு காட்டாமை அல்லது விலக்கப்படாமை, சமத்துவத்தின் பல்வேறு அம்சங்களைக் கையாளும் அரசியலமைப்பின் திருத்தங்களை ஆய்வு செய்ய வேண்டிய சந்தர்ப்பம் இதுவரை வாய்த்தது இல்லை.
எனவே நீதிமன்றம் பாரபட்சமற்ற அல்லது விலக்கப்படாத கொள்கையின் மீது தீர்ப்பளிக்கவில்லை.
‘பாகுபாடு இல்லாமை ‘ அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும், குறிப்பாக எஸ்சி/எஸ்டி சமூகங்களை ஒதுக்கிவிடவோ அல்லது பாகுபாடு காட்டவோ கூடாது என்ற உத்தரவின் முக்கியத்துவம் [அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 17 மற்றும் 15 இல் உள்ள வெளிப்படையான விதிகளின் காரணமாக] சமத்துவத்தின் சாரத்தை உருவாக்குகிறது.
சமத்துவத்தை ஊக்குவிக்க இட ஒதுக்கீடு பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியுமா?
“எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்கள் தங்கள் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக இடஒதுக்கீட்டின் மூலம் உள்ளடக்கப்பட்டிருப்பது, அவர்கள் பல நூற்றாண்டுகளாக எதிர்கொள்ளும் பழமையான தடைகள் (அவை இன்னும் நடைமுறையில் உள்ளன, மேலும் அவர்களின் சம பங்களிப்பை உறுதிப்படுத்துவது அவசியம்) ஒரு அடித்தளமாக இருக்க முடியுமா?”
“ இந்த நாட்டின் மக்கள்தொகையில் 82% (எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி) கொண்ட இந்தப் பெரிய பிரிவைச் சேர்ந்தவர்களை எப்படி ஒதுக்கி வைப்பது, அந்த இலக்கை எப்படி முன்னேற்றும் என்று பரிந்துரைக்க இந்த சட்டத்தில் எதுவும் இல்லை. அவர்களும் சமூகத்தின் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்கள். இந்தப் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் பலனைப் பெறத் தகுதியானவர்கள்”

பழங்குடியினரே மிகவும் ஏழ்மையானவர்கள்
“சின்ஹோ கமிட்டியின் படி, அனைத்து பட்டியலிடப்பட்ட பழங்குடியினரில் 48.4% பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். இது மக்கள் தொகையில் 4.25 கோடி. இவர்கள், இந்த ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்க, இந்த சட்டத்தின் மூலம் இயலாமல்போகிறது.
வினோத் அருளப்பன்