ஞானமடைய எப்படி நேரம் ஒதுக்குவது?

சிறப்புக் கட்டுரை

சத்குரு

நாம் எடுத்திருக்கும் பணியில் சில மைல்கல்களை அடைய விரும்பினால், அதற்கு நிறைய நேரம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. ஞானோதயமடைய எப்படி நேரம் ஒதுக்குவது? 

பதில்

உங்களை நீங்கள் கையாளும் விதம்

உங்கள் மனதில் ஞானோதயம் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்துக்களை முதலில் தெளிவாக்குவோம்.

உங்களிடம் செல்ஃபோன் உள்ளதா? நீங்கள் காமிரா பயன்படுத்துபவரா? நீங்கள் எந்தக் கருவியை பயன்படுத்துபவராக இருந்தாலும் சரி, அதைப் பற்றி முழுமையாய் தெரிந்திருக்கும் பட்சத்தில் அதனை நீங்கள் திறம்பட கையாள இயலும்.

அதனைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ளும் பட்சத்தில் உங்களால் அந்தப் பொருளை வைத்துக் கொண்டு என்ன செய்ய இயலுமோ அது பல மடங்கு மேம்படும்.

வாழ்க்கையின் நட்டு போல்ட்டுகளை அறிந்து கொண்டவராய் நீங்கள் இருந்தால், வாழ்க்கை மாயாஜாலமாய் மாறிப் போய்விடும்.

நாம் கையாளும் ஒவ்வொரு பொருளுக்கும் அது பொருந்தும்போது, உங்களுக்கு மட்டும் பொருந்தாதா என்ன? உங்களைப் பற்றி நீங்கள் ஆழமாய் புரிந்து கொள்ளும்போது உங்களை நீங்கள் கையாளும் விதமும் பன்மடங்கு மேம்படும்.

அதனால் ஞானோதயம் ஏதோ இமாலய மலைக் குகைக்குள் நடைபெறும் ஒரு விஷயம் என்று நீங்கள் கற்பனை செய்ய வேண்டாம். மலை குகைக்குள்ளும் ஞானோதயம் நடைபெற்றது, இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதனை நீங்கள் சரியாய் புரிந்து கொள்ளுங்கள் என்றுதான் நான் சொல்கிறேன்.

ஞானோதயத்திற்கு யார் எதிரி?

ஞானோதயம் என்றால் தன்னை உணர்தல் என்று பொருள். அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி அது உங்கள் தொழிலை பாதிக்கும்? நீங்கள் செய்ய விரும்பும் எதற்கும் எப்படி அது எதிரியாய் போகும்? உங்களைப் பற்றி எதையும் அறிந்து கொள்ளாமல் எப்படி நீங்கள் திறம்பட வாழ முடியும்? வாழ்க்கை முறையைப் பற்றி எதையுமே தெரிந்து கொள்ளாமல் ஒருவருக்கு ஒருவர் ‘எப்படி நம்பிக்கையோடு வாழ்வது’ என்று பாடம் புகட்டிக் கொள்கின்றனர்.

தெளிவில்லாத நம்பிக்கை, பேரழிவுதான். துரதிர்ஷ்டவிதமாக தெளிவிற்கு மாற்று, நம்பிக்கை என்று நாம் எண்ணிக் கொள்கிறோம்.

உங்கள் கண்களை கட்டிவிட்டு நடக்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்கள் புத்திசாலியான மனிதராய் இருந்தால், பாதையை உணர்ந்து, மெதுவாய் நடப்பீர்கள். சுவற்றை தொட்டுப் பார்த்து உணர்ந்து, உங்கள் பாதங்களில் ஏற்படும் உணர்ச்சிகளை தொடுகையுணர்வின் மூலம் உணர்ந்து நடப்பீர்கள்.

ஆனால் உங்கள் மேல் அதீத நம்பிக்கைக் கொண்டு நெஞ்சை உயர்த்தி நடை பயின்றால், வழியில் தென்படும் இடர்பாடுகள், பாறைகள் உங்கள் மேல் தன் அன்பை வெளிப்படுத்தாது. வாழ்க்கையும் அப்படித்தான். தெளிவில்லாமல் வெறும் வெற்று நம்பிக்கையைக் கொண்டு வாழ்பவர்களை வாழ்க்கை அன்புடன் அணுகாது.

நட்டு போல்ட்டுகளை அறியுங்கள்

உங்களைப் பற்றி நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ளும் பட்சத்தில், உங்களுக்காக நீங்கள் நிறைய விஷயங்களைச் செய்ய முடியும்.

வாழ்க்கையின் நட்டு போல்ட்டுகளை அறிந்து கொண்டவராய் நீங்கள் இருந்தால், வாழ்க்கை மாயாஜாலமாய் மாறிப் போய்விடும். நீங்கள் என்ன செய்தாலும் அது மாயாஜாலமாய் இருக்கும். நீங்கள் இங்கே சும்மா உட்கார்ந்தாலும் உங்களால் வேண்டியவற்றை செய்ய முடியும்.

கண் மூடி அமர்ந்தாலும் தேவையானவற்றை சாதிக்க முடியும். அயர்ந்து தூங்கினாலும் செய்ய முடியும். நீங்கள் கண் மூடி இருக்கிறீர்களோ ஆழமாக உறங்குகிறீர்களோ உங்கள் உடலமைப்புடன் நீங்கள் மாய வித்தை போன்ற செயல்களைச் செய்ய இயலும், உங்கள் உடலமைப்பின் செயல்பாடுகளை முழுமையாய் நீங்கள் தெரிந்து கொள்ளும் பட்சத்தில்…

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…

அமாவாசையும் பௌர்ணமியும் யார் யாருக்கு உகந்தது?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *