சத்குரு
வாழைப்பழம் இல்லாத பெட்டிக்கடைகள் தமிழ்நாட்டில் இல்லை எனலாம். வாழைப்பழங்கள் மிகவும் எளிதாகவும் மலிவாகவும் கிடைத்தாலும், நம்மில் பலர் அதிலுள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளை புரிந்துகொள்ளாமல், அதனை சாதாரணமாக நினைக்கிறோம்.
இந்த கட்டுரை, வாழைப்பழத்தின் நன்மைகளை அறிவியல் பூர்வமாக நமக்கு எடுத்துரைக்கிறது..
வாழைப்பழங்கள் நம் ஆரோக்கிய வாழ்விற்கு வழங்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை தொடர்ந்து படித்தறியுங்கள்!
எளிமையான இந்த வாழைப்பழம் இப்பிரபஞ்சத்தில் ஓர் விசித்திரமான வித்தியாசமான பழம் என்பது உங்களுக்குத் தெரியுமா?! உண்மையைச் சொல்வதானால், தாவரவியலின் அடிப்படையில் வாழைப்பழம் கொட்டையில்லா பழமாகும் மற்றும் வாழைமரம் மரம் வகையை சார்ந்தது அல்ல உலகின் மிகப்பெரிய மூலிகை வகை.
மருத்துவரை பார்க்க தேவையில்லை
7000ம் ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாகப் பயிரிடப்பட்டு, உலகில் மிக அதிகமாக பயிரிடப்படும் பழமாகவும் கோதுமை, நெல், சோளம் இவற்றிற்குப் பிறகு நான்காவதாக மிக அதிகமாக பயிரிடப்படும் விளைபொருளாகவும் உள்ளது. ஆண்டிற்கு பத்து லட்சம் கோடி வாழைப்பழங்கள் உட்கொள்ளப்படுகின்றன.
இந்த சத்தான பழம் உலகின் அனைத்து இடங்களிலும் நம் சாப்பாடு தட்டில் இடம் பிடித்துவிட்டது, அதுவும் நல்ல காரணத்திற்காக. வாழைப்பழம் சாப்பிடுவதன் பயன்கள் என்னென்ன என்பதை படித்தறியுங்கள்.
“தினமும் ஓர் வாழைப்பழம் மருத்துவரைக் காண தேவையிருக்காது”
உங்களுக்கு தெரியுமா பழைய ஆங்கிலத்தில் ‘பழம்’ என்றாலே ‘ஆப்பிளை’ தான் குறிக்குமென்று? சீரான உணவு பழக்கத்திற்கு பழங்களை தவிர்க்கமுடியாது என்ற நிலை ஆகிவிட்டது.
அதுவும் வாழைப்பழம் மிக எளிதாக கிடைப்பதால் உலகில் மிக அதிகமாக சாப்பிடும் பழமாக உள்ளது. வாழைப்பழத்தில் பொதிந்திருக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுக்கு தேவையானது.
மேலும், பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளதோடு, நுண்ணூட்டச் சத்துக்களான வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் சோடியம் ஆகியவற்றை வாழைப்பழம் வழங்குகிறது.
புத்தம் புதிய கனிந்த பழங்கள் உண்பதை நம் யோகிகளும் சித்தர்களும் பாரம்பரிய மருத்துவர்களும் பன்னெடுங்காலமாக பரிந்துரைத்து வந்துள்ளனர்.
இந்த வலைப்பதிவில், பழங்கள் உண்பது எப்படி நம் உடலுக்கும், மூளைக்கும் அற்புதமான விஷயங்களைச் செய்யும் என்பதையும் இந்த உலகிற்கு நன்மையாக அமையும் என்பதையும் சத்குரு விளக்குகிறார்.
ஈஷா யோக மையத்தில் வழங்கப்படும் ஒவ்வொரு வேளை உணவிலும் வாழைப்பழங்கள் ஓர் அங்கமாக இருக்கும். உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பல வகையான வாழைப்பழங்களில், மையத்தில் வழங்கப்படும் பொதுவான சில வகைகள் இங்கே:
கிராண்ட் நைன்
கற்பூரவள்ளி
நேந்திரன்
பச்சநதன்
பூவன்
செவ்வாழைப்பழம்
ரஸ்தாலி
ரோபஸ்டா
மலை வாழைப்பழம்
பெருங்குடலை சுத்தமாக வைத்து ஆரோக்கியத்தை உறுதிசெய்யுங்கள்
ஆயுர்வேதத்தில், பொதுவான ஆரோக்கியத்திற்கு சுத்தமான பெருங்குடல் மிக அவசியமானதாக கருதப்படுகிறது.
அதிக நார்ச்சத்து உள்ளதால் வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் உங்கள் குடல் இயக்கம் சீராக இருக்க உதவும்.
ஹார்வர்ட் பல்கலைக்கழக கட்டுரை, சீரான குடல் இயக்கம் ஆரோக்கியமான செரிமான இயக்கத்திற்கான ஒரு அடையாளமாக இருப்பது பற்றியும், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற உபாதைகளை தடுக்கும் விதம் குறித்தும் விவரிக்கிறது.
ஒழுங்கற்ற குடல் இயக்கம் உங்கள் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தி இருக்கின்றன. பெருங்குடல் சுத்தமாக இருப்பதன் நன்மைகள் தெளிவாகத் தெரிந்தாலும், இன்றைய உலகின் பதப்படுத்தப்பட்ட உணவு முறையில் இது பெரிய சவாலாக உள்ளது.
ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் நம் உடலுக்கு தினசரி தேவையான நார்ச்சத்து 12 சதவிகிதம் உள்ளது. மேலும், மலச்சிக்கலை சரிசெய்யும் தன்மையும் உள்ளது. பச்சை வாழைப்பழம் (பச்சை வாழை வகை) இதற்கு ஏற்றது, ஏனெனில் அதில் resistant starch எனப்படும் மாவுச்சத்து அதிகம் உள்ளது. இது கரையாத நார் போல செயல்பட்டு குடல் இயக்கத்தை சிறப்பாக வைக்கிறது.
வாழைப்பழம் உங்களை சந்தோஷமாக வைத்திருக்கும்!
உங்களுக்கு வாழைப்பழத்தின் சுவை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், அவை உங்களை சந்தோஷமாக வைத்திருக்கும். வெளிச்சூழ்நிலை விஷயங்களான நம் உணவு பழக்கம், மூளையின் வேதியியலில் தாக்கம் உண்டாக்கி, மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வின் உணர்வுகளை எப்படி அது உருவாக்குகிறது என்பதற்கான நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஆய்வுகள் உள்ளன.
வாழைப்பழத்தில் செரோடோனின் என்ற முக்கியமான ஹார்மோன் (ரத்தத்தில் உள்ள முக்கிய உட் சுரப்பி நீர்) உள்ளது. இது நமது நல்வாழ்விற்கும் சந்தோஷத்திற்கும் தேவையான மனநிலை மற்றும் உணர்வுகளை சமநிலையில் வைத்திருக்கும். வைட்டமின் B6 ன் சத்தான மூலமாகவும் இது உள்ளது. மேலும், மூளையில் இயற்கையாக செரோடோனின் உருவாக இது வழிசெய்கிறது.
2008ம் ஆண்டில் (தி பிரிட்டிஷ் ஜார்னல் ஆப் நியூட்ரிஷன்) ஆங்கிலேய ஊட்டச்சத்து இதழில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வில், அதிக பொட்டாசியம் சத்துள்ள உணவினால் மனச்சோர்வின் அறிகுறி, பதற்றம் இவற்றிலிருந்து பங்கேற்பாளர்கள் விடுபடமுடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
டாக்டர் கரோலின் லோங்மோர் அவர்களின் கருத்துப்படி பாலாடைக்கட்டி, மனச்சோர்வுக்கும் குறைந்த அளவிலான செரோடோனுக்கும் தொடர்புள்ளது மற்றும் பாலாடைக்கட்டி, வாழைப்பழம் போன்ற அமினோ ஆசிட் ட்ரிப்டோபான் அதிகம் உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் நம் உடலின் செரோடோனின் அளவை மேம்படுத்த முடியும். அவர்கள் வாரத்திற்கு நான்கு வாழைப்பழம் சாப்பிடுவதை பரிந்துரை செய்கிறார்கள்.
அடுத்த முறை நீங்கள் சோர்வாக இருக்கும்போது, பேரிச்சம்பழம் வாழைப்பழ கூழை பருகுங்கள். பேரிச்சையின் அற்புதமான இயற்கையான இனிப்பும், புத்தம்புதிய வாழைப்பழமும் சேர்ந்து உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் வாழைப்பழம்
இன்றைய சவாலான நேரங்களில் சிறப்பான நோய் எதிர்ப்பு அமைப்பு வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் பெரிய வித்தியாசத்தை தருகிறது. வாழைப்பழங்கள் நுண்ணுயிர் கலந்த உணவு வகையை சேர்ந்தது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் நேரடி தாக்கம் ஏற்படுத்தும் குடல் நுண்ணுயிர்கள் (பாக்டீரியா) உருவாக உறுதுணையாகிறது.
ஆராய்ச்சியாளர்கள் சொல்வதாவது, நோய் எதிர்ப்பு அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு, போதுமான அளவு புரதச்சத்து, அத்தியாவசியமான அமிலங்கள் மற்றும் குறைந்தது 11 வைட்டமின்களும் தாது சத்துகளும் இணைந்து செயல்படுகின்றன.
ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் தினசரி உட்கொள்ள வேண்டிய 11 ஊட்டச்சத்துகளில் 5 உள்ளது: இரும்பு, துத்தநாகம், வைட்டமின் A, செலினியம் மற்றும் புரதம். இது மேலும், ஓர் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான மேலும் நான்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் வழங்குகிறது.
தினசரி அளவில் தேவையான 11 சதவிகிதம் வைட்டமின் சி சத்தை ஒரு வாழைப்பழம் கொடுக்க முடியும். இது ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்ய அவசியமானது – நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அடித்தள கட்டம்.
ஆனால் மிகப்பெரிய காரணம், ஏன் வாழைப்பழம் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஆதரவாக உள்ளதென்றால் அதில் உள்ளடங்கியுள்ள அதிக அளவிலான வைட்டமின் B6. உடலின் நோய் எதிர்ப்பு திறன் செயல்பட, புரதங்கள் உற்பத்தி செய்திட வைட்டமின் B6 அவசியமானது. ஒரு நடுத்தர (சராசரி) அளவிலான வாழைப்பழத்தில் 30 சதவிகிதம் பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ள வேண்டிய வைட்டமின் B6 உள்ளது.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பழுத்த வாழைப்பழங்களை நாடுங்கள். 2009ம் ஆண்டில் புட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ல் பிரசுரிக்கப்பட்ட ஆய்வின்படி, ரத்தத்தில் வெள்ளை அணுக்களை மேம்படுத்த, பழுத்த வாழைப்பழங்கள் எட்டு மடங்கு சிறந்தது, பழுக்காத வாழைப்பழங்களை விட.
இதயம் காக்கும் வாழைப்பழம்
பொட்டாசியம் நம் உடலில் நரம்புகள் மற்றும் தசைகளில் உள்ள செல்களுக்கு தேவையான மினரல் கனிம எலெக்ட்ரோலைட் ஆகும். அது இது ரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றும் இதய செயல்பாடு, திரவ சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
பொட்டாசியம் குறைபாடு உயர் ரத்த அழுத்தம், உயர் மன அழுத்தம் உட்பட தீவிரமான உடல் கோளாறு ஏற்பட காரணமாகிறது. பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளான வாழைப்பழம் போன்றவற்றின் செயல்திறன், ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் இருதய நோய்கள், பக்கவாதம் வராமல் தடுப்பதிலும் சிறப்பாக துணைநிற்பது அறிவியல் ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
மேலும் சில ஆய்வுகளில், பொட்டாசியம் நிறைந்த உணவு ரத்த ஓட்டத்தில் சோடியம் அளவை கட்டுப்படுத்துதல் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்கலாம் என காட்டுகின்றன.
பொட்டாசியம் சத்தைப் பெறுவதற்கு வாழைப்பழம் ஓர் மிகச்சிறந்த இயற்கையான மூலம். ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழம் தினசரி உட்கொள்ள தேவையான பொட்டாசியத்தில் 12 சதவிகித அளவைக் கொண்டுள்ளது.
உங்கள் சேமிப்பே உங்கள் சிறை ! – சத்குரு