சத்குரு
மனச்சோர்வு என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். முதலில், “தாழ்வுணர்ச்சி” என்றால் என்ன? அப்போது உங்களுக்குள் என்ன நடக்கிறது? அடிப்படையில், ஏதோ ஒன்று நடக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள், அது நடக்கவில்லை.
யாரோ அல்லது ஏதோ ஒன்று உங்கள் வழியில் நடக்க வேண்டும் என்றோ, அல்லது இந்த உலகமோ அல்லது விதியோ உங்கள் வழிப்படி நடக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள், ஆனால் அது நடக்கவில்லை.
வேறு விதமாகச் சொன்னால், இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறதோ, அதற்கு நீங்கள் எதிராக இருக்கிறீர்கள்; அவ்வளவுதான். ஒருவேளை நீங்கள் ஒரு நபருக்கு எதிரானவராக இருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு எதிரானவராக இருக்கலாம் அல்லது ஒருவேளை நீங்கள் வாழ்க்கைக்கே எதிரானவராக இருக்கலாம். அதற்குத் தகுந்தாற்போல, மனச்சோர்வும் இன்னும் ஆழமாக இருக்கும்.
ஏதாவது ஒன்றிற்கு எதிரானவராக நீங்கள் ஏன் இருக்கிறீர்கள்? நடப்பவைகள் எல்லாம் நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் நடக்காததால் மட்டுமே, இல்லையா? முழு உலகமும் நீங்கள் எதிர்பார்த்தபடி ஏன் நடக்க வேண்டும்?.
இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும், இந்த உலகம் என்பது உங்கள் முட்டாள்தனமான வழிப்படி நடப்பதில்லை. ஒன்று, உங்களுக்கு படைத்தவன் மீது நம்பிக்கை இல்லை அல்லது உங்களுக்குள் ஏற்றுக்கொள்ளும் திறம் இல்லை, அல்லது இரண்டுமே இல்லை.
இதனுடன், அதி-உணர்ச்சிமயமான தன்முனைப்பு என அழைக்கப்படும் தொட்டாற்சிணுங்கி போன்ற உங்கள் ‘ஈகோ’ சேர்ந்துள்ளது. அதனால்தான் நீங்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறீர்கள்.
ஈஷா யோகா நிகழ்ச்சி பங்கேற்பாளர்களில் 93% பேர், தங்களது பய உணர்வு மற்றும் மன அழுத்தம் வெகுவாகக் குறைந்து, மகத்தான மேம்பாடு அடைந்துள்ளதாகப் பதிவுசெய்துள்ளனர்.
மனச்சோர்வு எல்லாவற்றிலும் குறை காண்பவராக உங்களை மாற்றுவதுடன், தனக்குத்தானே ஆழமான சுய-சேதத்தையும் ஏற்படுத்துகிறது. மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே அதிகம் காயப்படுத்திக்கொள்கிறார்கள். கொலை என்பது பொருள் உடல் ரீதியானது என்று மட்டும் அர்த்தமல்ல.
மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட நபர் எப்போதும் தனக்கே அதிக சேதத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். கையில் வாள் எடுத்து பிறரைக்கொல்லும் ஒரு மனிதனுடைய ஈகோ, மனச்சோர்வடைந்த மனிதனின் ஈகோவைப் போன்று அவ்வளவு உணர்ச்சி மயமானதல்ல. மேலும் அதை வளர்க்க எவ்வித ஊக்கமும் அவசியமில்லை.
உக்கிரமான மனிதனை மிக எளிதாக அமைதிப்படுத்திவிட முடியும். இதை நீங்கள் தெருக்களில் பார்த்திருக்கக்கூடும். யாரோ சிலர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது, கொஞ்சம் புத்திசாலித்தனமான ஒருவர் இருந்தால், அவர் அவர்களை சரியான விதத்தில் கையாண்டால், ஒருவரை ஒருவர் கொல்லத் துடிக்கும் நபர்கள் கூட, அடுத்த கணமே, சண்டையைக் கைவிட்டு நண்பர்களாக பிரிந்து செல்வார்கள்.
ஆனால் மனச்சோர்வடைந்த நபரைப் பொறுத்தவரையில் அப்படி இல்லை. இதை அவர் வாழ்க்கை முழுவதும் சுமந்து செல்வார். விழிப்புணர்வுடன் செய்தாலும், இல்லாவிட்டாலும், இத்தகைய மக்கள், தங்கள் கத்தியையே கூர்படுத்தி, தங்கள் இதயத்தையே குத்திக்கொள்கிறார்கள்.
ஒரு மனிதன் தன்னைத்தானே ஏன் காயப்படுத்திக்கொள்ள வேண்டும்? பொதுவாக அனுதாபம் பெறுவதற்காகத்தான். மிகவும் மனச்சோர்வடைந்த ஒரு நபருக்கு, சாதாரண அனுதாபம் போதாது; யாராவது அவருடன் சேர்ந்து இரத்தம் சிந்தவும் வேண்டும்.
உங்களிடம் உள்ள எது காயப்படக்கூடியது? நான் உங்கள் உடலை ஒரு தடியால் அடித்தால், உடல் காயமடையும்; அது வேறு. இதைத்தவிர, காயப்படக் கூடியது என்று உங்களுக்குள் வேறு என்ன இருக்கிறது? வெறும் ஈகோ மட்டும்தான் இல்லையா?
மனமும், உள்ளார்ந்த இயல்பும் புண்படுத்தப்பட முடியாதது. ஈகோ மட்டுமே காயப்படுகிறது. ஆகவே, “நான் வளர, மேம்பட விரும்புகிறேன்” என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்றால், வளர்ச்சி என்பதே இதைத் தாண்டி, உங்கள் ஈகோவை மிதித்து முன்னேறுவதில்தான் இருக்கிறது.
ஒருவர் எந்த உணர்ச்சியை வேண்டுமானாலும் தம் வாழ்க்கையில் ஒரு உந்துசக்தியாக மாற்றிக்கொள்ள முடியும். நீங்கள் முழுமையற்றவர் என்பதை உங்கள் சோகம் உங்களுக்கு நினைவூட்டினால், அது நல்லதே; உங்கள் சோகத்தை உங்கள் வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆனால், நீங்கள் சோகமாக இருக்கும்போது, இந்த உலகம் முழுவதும் தவறெனக் கருதி, எரிச்சலையும் கோபத்தையும் மட்டுமே அடையப் போகிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு முட்டாள். உங்கள் சோகத்தை கோபமாக மாற்ற விரும்புகிறீர்களா அல்லது அன்பாகவும் இரக்கமாகவும் மாற்ற விரும்புகிறீர்களா? நீங்கள் சோகமாக இருக்கும்போது, இரக்கமுள்ளவராக மாறுவது என்பது மிகவும் எளிதானது.
இது ஒருவிதமான கரைந்து விடச்செய்யும் ஆற்றலாகும்; இன்னும் ஆழமாகக் கரைந்து போவதற்கு உபயோகப்படுத்துவதன் மூலம் உங்கள் உன்னத நல்வாழ்வை நோக்கிச் செல்வதற்காக இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஒரு துரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால், மக்கள் வாழ்க்கையினால் காயப்படும்போது மட்டும்தான் அவர்களுக்குள் மனிதத்தன்மை வெளிப்படுகிறது. பெரும்பாலான மக்களுக்கு, கவலையும் வலியும் அறியாமல் முதிர்ச்சி ஏற்படுவதில்லை. இது இல்லாதுபோனால், அவர்களுக்குள்ளும் அவர்களைச் சுற்றியுள்ள வேறு யாருடனும் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
யோகத்திலே, மனச்சோர்வு என்பது உடல், மனம் மற்றும் சக்தி நிலையின் அளவில் கையாளப்படுகிறது. தேகம், மனம் மற்றும் சக்தி உடல்களிலே தேவையான சமநிலையையும், தீவிரத்தையும் கொண்டுவந்தால், ஆனந்தமாக இருப்பது என்பது மிகவும் இயல்பானது. ஆனந்தமான ஒருவரிடம், மனச்சோர்வு என்பதே ஒருபோதும் இருக்க முடியாது.
ஈஷா யோகா மையம்
ஈஷா யோகா என்பது யோக அறிவியலிலிருந்து பெறப்பட்ட நல்வாழ்வுக்கான தொழில்நுட்பமாகும். உங்கள் வாழ்க்கை, உங்கள் பணியிடம் மற்றும் நீங்கள் வாழும் உலகத்தை உணர்ந்து அனுபவிக்கும் விதத்தில் உள்நிலை மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், ஒருவரின் உள்நிலை வளர்ச்சிக்கான முழுமையான கருவியாக இது வழங்கப்படுகிறது.
தன்னிலை மாற்றத்திற்கான சக்திவாய்ந்த செயல்முறைகள், பாரம்பரிய யோகத்தின் சாரம், வாழ்க்கையின் உன்னத அம்சங்களை உணர்ந்தறிவதற்கான தியானங்கள் மற்றும் தொன்மையான ஞானத்தின் ரகசியங்களை அறிவதற்கான உத்திகள் ஆகியவற்றின் மூலம் உங்கள் உள்ளார்ந்த திறனை வெளிக்கொணர்வதே இந்த வகுப்பின் நோக்கமாகும்.
ஈஷா யோகா வகுப்பு சுய-ஆய்வு மற்றும் தன்னிலை மாற்றத்திற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கி அதன்மூலம் முழுமையான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…
2,3 நாட்கள் வந்தால் தேர்வெழுத அனுமதியா?: அன்பில் மகேஷ் பதில்!
ராஜினாமா… அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து: நயினார் நாகேந்திரன்