இந்தியன் 2 படத்தில் நடிக்கும் யுவராஜ் சிங் தந்தை

Published On:

| By Kavi

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்து வரும்படம்  ‘இந்தியன் 2‘.

இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. இதனால்,படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை.

தற்போது படத்தை முடிக்கும் வகையில் தீவிரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டுள்ளது

அங்கும் சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் உள்ள அரசு அலுவலகத்திலும் படத்தின் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் நடித்திருக்கிறார்.

இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் , ”கேமராவுக்குப் பின்னால் இருக்கும் அனைத்து ஹீரோக்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன். என்னை மேலும் அழகாக மாற்றியதற்கு மேக்கப் மேனுக்கு நன்றி. கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டேன்” என பதிவிட்டுள்ளார்.

இராமானுஜம்

திறந்தவெளி கழிப்பிடப் பிரச்சினையின் பரிமாணங்கள்: பகுதி 1

வேலைவாய்ப்பு : திருச்சி என்.ஐ.டி.யில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share