சுங்கக்கட்டணம்: இதை செய்யாவிட்டால் ஃபாஸ்டேக் எண் ரத்து!

Published On:

| By christopher

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் மூலமான சுங்கக்கட்டண வசூல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள நிலையில்,

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஃபாஸ்டேக் எண்களுக்கான கேஒய்சி படிவத்தை ஜனவரி 31-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அளிக்காவிட்டால், அந்த ஃபாஸ்டேக் எண் ரத்தாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில்,

‘ஃபாஸ்டேக்’ என்ற முறையைப் பயன்படுத்தி ரேடியோ அலைவரிசை அடையாள தொழில்நுட்பத்தின் தானியங்கி இயந்திரம் மூலம் தாமாக கட்டணத்தை வங்கிக் கணக்கிலிருந்து வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டது.

இதன்மூலம் ஃபாஸ்டேக் ஸ்டிக்கா் ஒட்டிய வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திராமல் பயணத்தைத் தொடர முடியும்.

சுங்கக் கட்டணம் மட்டுமின்றி, நாடு முழுவதும் 50-க்கும் அதிகமான நகரங்களில் 140-க்கும் அதிகமான வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் கனரக சரக்கு வாகனங்களுக்கான நிறுத்துமிட கட்டணமும் ஃபாஸ்டேக் மூலமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டேக் முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India – NHAI) சுங்கக்கட்டண வசூல் முறைக்கு புதிய விதிமுறையை கொண்டு வருகிறது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஃபாஸ்டேக் எண்களுக்கான கேஒய்சி படிவத்தை ஜனவரி 31ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அளிக்காவிட்டால், அந்த ஃபாஸ்டேக் எண் காலாவதியாகிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஃபாஸ்டேக் எண்ணுடன் கேஒய்சி முறையை பூர்த்தி செய்யாவிட்டால்,  ஐஎச்எம்சிஎல் (IHMCL – Indian Highways Management Company Limited)  வாடிக்கையாளர் இணையதளத்துக்குச் சென்று டேஷ்போர்டு மெனுவில் சென்று கேஒய்சியை பூர்த்தி செய்யலாம்.

இதன்மூலம், ஒரே ஃபாஸ்டேக் எண்ணை பலரும் பல வாகனங்களுக்குப் பயன்படுத்தும் நடைமுறை தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ் : வீட்டிலேயே ஈஸியா தயாரிக்கலாம் கண் மை!

விஷாலின் அடுத்தப் படம் அறிவிப்பு!

திருவள்ளுவரை வம்புக்கு இழுப்பதா? – ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share