ஃபாஸ்டேக் கேஒய்சி அப்டேட் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!

Published On:

| By Selvam

Fastag kyc date extended

வாகனங்களின் பாஸ்டேக்குகளுக்கான கேஒய்சி புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 29-ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக  ‘ஃபாஸ்டேக்’ கட்டணம் செலுத்தும் முறை கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை 63 சுங்கச்சாவடிகள் உள்ளன.

அனைத்து சுங்கச்சாவடிகளிலும், ஃபாஸ்டேக் மூலமாக தாமாக கட்டணத்தை வங்கிக் கணக்கிலிருந்து வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  இதன்மூலம் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல் பயணத்தைத் தொடர முடியும்.

இந்த நிலையில் ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டேக் முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கக்கட்டண வசூல் முறைக்கு புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஃபாஸ்டேக் எண்களுக்கான கேஒய்சி படிவத்தை ஜனவரி 31ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அளிக்காவிட்டால், அந்த ஃபாஸ்டேக் எண் காலாவதியாகிவிடும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்தது. இதன்மூலம், ஒரே ஃபாஸ்டேக் எண்ணை பலரும் பல வாகனங்களுக்குப் பயன்படுத்தும் நடைமுறை தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், கேஒய்சி புதுப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது. பலரும் கேஒய்சி படிவத்தை பூர்த்தி செய்து அப்டேட் செய்யவில்லை.

இதன்காரணமாக, கேஒய்சி புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 29-ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: ஆடைகள் விஷயத்தில் அலுவலகத்தில் அசத்த!

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்: அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share