டிராக்டர்கள், ஜேசிபிக்களோடு டெல்லியை நோக்கி விவசாயிகள்! மீண்டும் கண்ணீர்ப் புகை குண்டுகள்!

Published On:

| By Aara

Farmers towards Delhi with tractors JCPs

டெல்லி சலோ போராட்டத்தை விவசாயிகள் இன்று (பிப்ரவரி 21)  தொடங்கியதையடுத்து, டெல்லி காவல்துறை தலைநகரில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. ஹரியானாவில் விவசாயிகள் போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுகின்றன.

பயிர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கான ஓய்வூதியம் ஆகியவற்றை வலியுறுத்தி கடந்த வாரம் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் போராட்டத்தை அறிவித்தனர். மூன்று மத்திய அமைச்சர்கள் குழு, விவசாயிகளுடன் பேச்சு நடத்தியது. ஆனால் இதில் முடிவு ஏற்படவில்லை.

அதனால் பிப்ரவரி 21 ஆம் தேதி டெல்லியை நோக்கி ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் போராட்டத்தை அறிவித்தனர் விவசாய சங்கத்தினர்.

திட்டமிட்டபடி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து டெல்லியை நோக்கி, பேரணியாக கிளம்பிவிட்டனர் விவசாயிகள். 14 ஆயிரம் விவசாயிகள், 1200 டிராக்டர்கள் மற்றும் ஜேசிபிகளோடு டெல்லியை நோக்கி இன்று காலை புறப்பட்டுள்ளனர். இதனால் டெல்லியை ஒட்டியுள்ள திக்ரி, சிங்கு மற்றும் காஜிபூர் எல்லைகளில் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Farmers towards Delhi with tractors JCPs

இதற்கிடையே ஹரியானா, பஞ்சாப் மாநில காவல்துறை டிராக்டர் மற்றும் ஜேசிபி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறது.

அதாவது விவசாயிகள் போராட்டத்துக்கு டிராக்டர்கள், ஜேசிபிக்களை கொடுக்க வேண்டாம். போராட்டக் களத்தில் இருக்கும் கனரக வாகனங்கள் போலீஸார் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஒரு கருவியாக பயன்படலாம். அவற்றின் பதிவு நம்பர்களை வைத்து உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதியப்படும்  என்று எச்சரித்துள்ளது.

அதேநேரம் கிசான் மஸ்தூர் மோர்ச்சாவின் ஒருங்கிணைப்பாளர் சர்வான் சிங் பந்தேர் கூறுகையில், “நாங்கள் யாரையும் தாக்க மாட்டோம். நாங்கள் வெறுங்கையுடன் செல்கிறோம். டெல்லியில் உள்ள மத்திய அரசை முடிவு எடுக்க வலியுறுத்துகிறோம். எம்எஸ்பி மீதான சட்டத்தை இயற்றுவோம் என்று அவர்கள் உறுதியளித்தால்… இந்த நிலைமை அனைத்தும் முடிவுக்கு வரும்” என்று கூறினார்.

 

இன்று காலை 11 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது  ஹரியானா போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை  வீசி  விரட்டியடித்து வருகின்றனர். Farmers towards Delhi with tractors

டெல்லியின் எல்லைகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.  மேலும் விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேற்றிச் செல்வதால் டெல்லி எல்லைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் மறைவு: தலைமை நீதிபதி சந்திரசூட் இரங்கல்!

ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த விலை… ஒரு கிராம் எவ்வளவுன்னு பாருங்க!

Farmers towards Delhi with tractors

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share