எலுமிச்சைக்கு நிலையான விலை: விவசாயிகள் மகிழ்ச்சி!

Published On:

| By admin

எலுமிச்சைக்கு நிலையான விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உடுமலை சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். பருவநிலை, நீர்வரத்து மற்றும் நீர் இருப்புக்கு ஏற்றவாறு குறுகிய, மத்திய, நீண்ட கால பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அதன்படி காய்கறிகள், கீரைகள், தென்னை, வாழை, கரும்பு, எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு சில பகுதியில் எலுமிச்சை சாகுபடியும் நடைபெற்று வருகிறது. தற்போது கோடைக்காலத்தில் பொதுமக்கள் எலுமிச்சையை விரும்பி உணவில் பயன்படுத்தி வருவதால் அதிக அளவில் விற்பனையாகிறது. எலுமிச்சைக்கு நிலையான விலையும் கிடைக்கிறது.

இதுகுறித்து பேசியுள்ள உடுமலை பகுதி வியாபாரிகள், “எலுமிச்சை சாகுபடி உடுமலையைக் காட்டிலும் கிழக்கு மாவட்டங்களில் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் தென்காசி மாவட்டம் புளியங்குடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதியில் இருந்து எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து மொத்தமாக விற்பனை செய்து வருகிறோம். நிலையான விலையும் கிடைத்து வருகிறது. விவசாயிகளிடம் அதிக அளவில் வாங்கி விற்பனை செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்” என்று கூறியுள்ளனர்.

**ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share