தமிழ்நாட்டில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

Published On:

| By christopher

Fare hike in 36 toll gates in Tamil Nadu!

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று (ஜூன் 3) நள்ளிரவு 12 மணி முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது.

அதன்படி தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 1992-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மார்ச் 30ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து, சுங்கச்சாவடி கட்டண மாற்றம் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில் ஜூன் 1ஆம் தேதி மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் முடிவடைந்ததையடுத்து, இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் மணகதி, கல்லக்குடி, வல்லம், தென்மாதேவி உள்பட 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

ஒரு முறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையிலும் உயர்ந்துள்ளது.

அதன்படி சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.70, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.110, மாதாந்திர கட்டணம் ரூ.2,395 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலகுரக சரக்கு வாகனங்கள் சிற்றுந்துகளுக்கு ஒருமுறை பயணம் செய்ய ரூ.115, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.175,

பஸ், சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.245, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.365 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.265, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.400 கட்டணம் ஆகும்.

4 சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.380, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.570 கட்டணம். கடும் கனரக கட்டுமான வாகனங்கள் மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.465, ஒரேநாளில் சென்று திரும்ப ரூ.695 கட்டணம் ஆகும்.

உள்ளூர் கார்கள் ஒரு சுங்கச்சாவடியை கடக்க மாதம் ரூ.340 உத்தேச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுங்க சாவடி கட்டண உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள், லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஒன்றிய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பள்ளியிலேயே வங்கிக் கணக்கு: வழிகாட்டு நெறிமுறை வெளியிட்ட கல்வித்துறை!

இலவச வேட்டி – சேலை உற்பத்தி: அரசு உத்தரவிட விசைத்தறியாளர்கள் கோரிக்கை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share