‘இமயம் சரிந்தது’, ‘சொக்கத்தங்கம்’ விருத்தாசலத்தை நிறைத்த விஜயகாந்த் பேனர்கள்!

Published On:

| By Manjula

கேப்டன் விஜயகாந்த் உடல் தற்போது சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவால் நேற்று (டிசம்பர் 28) காலமான தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழகம் தாண்டியும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT

கடைசியாக ஒருமுறை அவரின் உடலை பார்க்க வேண்டும் என வெளிமாவட்டங்களில் இருந்து ரசிகர்களும், தொண்டர்களும் சாரைசாரையாக சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதனால் தான் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த அவரது உடல் தற்போது தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்தின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் ஏராளமான பகுதிகளில் தன்னிச்சையாக கடைகளுக்கு விடுமுறை அளித்து, கேப்டனுக்கு அவரது ரசிகர்கள் மரியாதை செலுத்தி உள்ளனர்.

ADVERTISEMENT

டெல்டா பகுதிகளான கும்பகோணம், பேராவூரணி பகுதிகளில் கடைகளுக்கு விடுமுறை அளித்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர்கள் வைத்துள்ளனர்.

தேமுதிக சார்பில் நடிகர் அருண் பாண்டியன் நின்று வெற்றி பெறும் அளவுக்கு, பேராவூரணி தொகுதி தேமுதிகவின் கோட்டையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல முதன்முதலில் கேப்டன் தேர்தலில் நின்று ஜெயித்த விருத்தாசலம் தொகுதியில், ஏராளமான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன.

அதோடு விஜயகாந்தின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள், பேனர்களால் மொத்த விருத்தாசலமும் நிறைந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும் போது தமிழக மக்களின் மனதில் என்றென்றும் அவர் கேப்டனாகவே நிறைந்திருப்பார் என தோன்றுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

சின்ன கவுண்டர் ஸ்டில், விஜயகாந்தை வீழ்த்த விருத்தாசலத்தில் நடந்த வியூகம்: மனம் திறக்கும் பத்திரிகையாளர்

”மத்திய, மாநில அரசு மரியாதை சும்மா வராது”: விஜயகாந்த் மறைவு குறித்து பார்த்திபன்

Photo of author
Manjula

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share