வெளி மாவட்டங்களில் இருந்து படையெடுக்கும் ரசிகர்கள்… மக்கள் வெள்ளத்தால் திணறும் கோயம்பேடு!

Published On:

| By Manjula

கேப்டன் விஜயகாந்தின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திட நேரில் வரும் தொண்டர்கள், ரசிகர்களால் கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மியாட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்(71)  இன்று (டிசம்பர் 28) காலை காலமானார்.

ADVERTISEMENT

தற்போது அவரின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நேரில் இறுதி அஞ்சலி செலுத்திட அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தேமுதிக அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ADVERTISEMENT

இதனால் வடபழனி தொடங்கி கோயம்பேடு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் முன்னரே மாற்றுப்பாதையில் செல்லுமாறு வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர்.

என்றாலும் வெளி மாவட்டங்களில் இருந்து தொடர்ந்து ரசிகர்கள், தொண்டர்கள் கோயம்பேட்டினை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதனால் அண்ணா ஆர்ச் – கோயம்பேடு சாலை, வடபழனி – கோயம்பேடு சாலை, நெற்குன்றம் – கோயம்பேடு சாலை மற்றும் திருமங்கலம் – கோயம்பேடு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரமணா படத்தின் இறுதிக்காட்சியில் இறந்த விஜயகாந்தின் உடலை காண, லட்சக்கணக்கான மக்கள் சிறைக்கு வெளியில் கூடி இருப்பது போல காட்சிகள் இருக்கும்.

அதேபோல தற்போது நிஜத்திலும் விஜயகாந்திற்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்திட லட்சக்கணக்கான ரசிகர்கள் கோயம்பேடு நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

தேமுதிக அலுவலகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதேபோல போக்குவரத்து போலீசாரும் சாலை நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

விஜயகாந்திற்கு அரசு இடத்தில் மணிமண்டபம் வேண்டும்: அண்ணாமலை

‘போராடடா ஒரு வாளேந்தடா’, ‘உனக்காக நாடே அழுகுதப்பா’… ரசிகர்கள் அதிகம் பகிரும் வீடியோக்கள் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share