9999… ஃபேன்சி பதிவெண்ணுக்கு ரூ.25.5 லட்சம்!

Published On:

| By Kavi

ஹைதராபாத்தில் தன்னுடைய காருக்கு 9999 ஃபேன்சி பதிவெண்ணைப் பெற உரிமையாளர் ஒருவர் ரூ. 25.5 லட்சம் செலுத்தியுள்ளதாக தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள ஹைதராபாத் இணை போக்குவரத்து ஆணையர் ரமேஷ், “ஃபேன்சி பதிவெண்களுக்கான ஆன்லைன் ஏலத்தில், ‘9999’ என்ற எண் அதிக ஏலத்தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. கார் உரிமையாளர் அந்த சிறப்பு எண்ணுக்காக (‘டிஜி-09 9999’) ரூ.25,50,002-ஐ போக்குவரத்து துறைக்கு செலுத்தியுள்ளார்.

நேற்று (மே 21) நடைபெற்ற ஏலத்தில் 11 பேர் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அதில், ‘9999’ என்ற ‘ஃபேன்சி’ பதிவெண் ரூ.25.5 லட்சத்துக்கு ஏலம் போனது. தெலங்கானாவில் இதுவரை அதிக தொகைக்கு ஏலம் போன பதிவெண் இதுவாகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும், இதே ‘9999’ என்ற எண் ரூ.21.6 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தது.

‘ஃபேன்சி’ எண்ணில் ஆர்வமுள்ள எவரும் 50,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து, ஏலத்தில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் மாவட்டத்தில் உள்ள கைரதாபாத் மண்டல சாலைப் போக்குவரத்து ஆணையம் ‘ஃபேன்சி’ எண்களுக்கான ஏலத்தில் இதுவரை 43 லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு, இந்த ஆண்டு மார்ச் மாதம் வாகனப்பதிவுக் குறியீட்டை ‘டிஎஸ்’ஸில் இருந்து ‘டிஜி’ என மாற்றியது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: நாள்தோறும் 10,000 நடைகள் என்பது சாத்தியமா?

பியூட்டி டிப்ஸ்: மாறிவரும் பருவநிலைக்கேற்ப உங்களை அழகாக்கிக் கொள்வது எப்படி?

கிச்சன் கீர்த்தனா: வேர்கடலை லட்டு!

ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா? அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share