தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது திரை பயணத்தை தொடங்கிய நக்ஷத்ரா நாகேஷ், விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் நாயகியாக நடித்து ஒரு நடிகையாகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
இந்த தொடரில் நக்ஷத்ராவிற்கு ஜோடியாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் நடித்திருந்தார். மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த தமிழும் சரஸ்வதியும் தொடர் சில மாதங்களுக்கு முன்புதான் முடிவுக்கு வந்தது. இந்த தொடர் முடியப்போகிறது என்று தெரிந்ததிலிருந்தே இந்த தொடரின் சீசன் 2 எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் கேட்க தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு இந்த தொடரும், தீபக் மற்றும் நக்ஷத்ரா ஜோடி செம ஃபேமஸ்.
தமிழும் சரஸ்வதியும் சீரியலை தொடர்ந்து நக்ஷத்ரா அடுத்து எந்த சீரியலில் நடிக்கப் போகிறார் இல்லை திரைப்படங்களில் நடிக்க போகிறாரா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தான் புதிதாக ஓர் கார் வாங்கி உள்ளதாக சில நாட்களுக்கு முன் நட்சத்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
தான் வாங்கிய ஹோண்டா எலிவேட் என்ற புதிய காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நக்ஷத்ரா பகிர்ந்ததை தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமின்றி சேட்டை, வாயை மூடி பேசவும், இரும்பு குதிரை, மிஸ்டர் லோக்கல், ஹே சினாமிகா போன்ற திரைப்படங்களிலும் நக்ஷர்தா நாகேஷ் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…