மிருணாள் தாகூரின் கண்கள், உதடு, மூக்கு அமைந்த விதத்தில் ஏதோ இருக்கிறது என, நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா – மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகியிருக்கும் பேமிலி ஸ்டார் திரைப்படம் நாளை மறுநாள் (ஏப்ரல் 5) வெளியாகிறது. மிடில் கிளாஸ் பையனாக விஜய் நடித்திருக்கும் இப்படத்தில் கல்லூரி மாணவியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார்.
https://twitter.com/TheDeverakonda/status/1775005148844261414
இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்து இருக்கிறார். தற்போது படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழு பிஸியாக ஈடுபட்டுள்ளது.
இந்தநிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா மிருணாளுடன் நடித்தது குறித்து மனந்திறந்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், ”நான் சினிமா குறித்து கனவு காண்பதற்கு முன்பே மிருணாள் தாகூர் நடிக்க வந்துவிட்டார்.
உங்களுக்கு அருமையான முகம் என நான் மீண்டும், மீண்டும் அவரிடம் கூறி வருகிறேன். தன்னுடைய இளம்வயதிலேயே அவர் திரையுலகில் நுழைந்து விட்டார். அதிகம் அவர் பேசாவிட்டாலும், மொழி புரியாவிட்டாலும் நம்மால் அவரின் எமோஷனல்களை உணர முடியும்.
மிருணாளின் கண்கள், மூக்கு, உதடு அமைந்த விதத்தில் ஏதோ இருக்கிறது. அவருடன் இணைந்து நடிப்பது எளிதாக இருந்தது”, என மிருணாள் தாகூரை பயங்கரமாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.
பேமிலி ஸ்டார் படத்தின் நீளம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஆகும். படத்திற்கு தணிக்கைத்துறை யூ/ஏ சான்றிதழை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இவிஎம் மெஷின்… சந்தேகம் கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ கதை இதுதான் ?
Cyclone Alert: சூறாவளிக்காற்று வீசக்கூடும்… கடலுக்கு செல்ல வேண்டாம்!