தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் இன்றும் (மே 4) நாளையும் கடல் அதீத கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் சிவப்பு எச்சரிக்கையை இந்திய கடல்சார் தகவல் மையம் விடுத்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் மே 28ஆம் தேதி வரை அடுத்த 25 நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மே 6ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
இதற்கிடையே, தென் தமிழக கடலோரங்களில் அதீத அலைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.
அதாவது, “தென் தமிழக கடற்கரைகளான குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, லட்சதீவு மாநில கடலோரங்களிலும் நாளை இரவு வரை 0.5 – 1.8 மீட்டர் வரை கடல் அலை எழும்புவதற்கு வாய்ப்புள்ளது. இதனை முன்னிட்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ளக்கடல் நிகழ்வு!
இந்த அதீத அலை எழும்புவதை ’கள்ளக்கடல்’ நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ள இந்திய கடல்சார் தகவல் மையம் (INCOIS) பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பு ஏற்படுவதை குறிக்கவே கள்ளக்கடல் எச்சரிக்கை விடப்படுகிறது.
????கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
????சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் (செங்கல்பட்டு) மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
????விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
????இன்றும் நாளையும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
????கடல் கொந்தளிப்பு, கடல் அலை சீற்றம் காரணமாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி, கடலோர பகுதியில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தடையை மீறி போராட்டம்… நாம் தமிழர் நிர்வாகிகள் கைது : சீமான் கண்டனம்!
ஏற்காடு சாலை விபத்து: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்!