பாலியல் வன்கொடுமை: மறைப்பதற்கு 3 மெடல் கொடுத்த பிரின்ஸ்பால் …கிருஷ்ணகிரி சிறுமி அதிர்ச்சி வாக்குமூலம்!

Published On:

| By Kavi

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கி வருகிறது.

இந்த வடுவே மக்கள் மனதிலிருந்து நீங்காத நிலையில், கிருஷ்ணகிரியில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கிங்ஸ்லி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் என்சிசி முகாம் என்ற பெயரில் ஒரு போலி முகாமை நடத்தி, அந்த பள்ளியில் பயின்று வந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த சிவராமன்.

நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன் அந்த பகுதியில் உள்ள மேலும் சில பள்ளிகளுக்கு சென்று என்.சி.சி முகாம் நடத்தியிருப்பதும், அவருக்கு திருமணமாகி குழந்தை இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமியிடம் பர்கூர் மகளிர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சூர்யகலா  கடந்த 17ஆம் தேதி வாக்கு மூலம் பெற்றார்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த சிறுமி போலீசாரிடம் கூறுகையில் “நான் கந்திகுப்பத்தில் உள்ள கிங்ஸ்லி ஸ்கூலில் 8ம் வகுப்பு படிக்கிறேன்.

கடந்த 05.08.2024ம் தேதி முதல் காலை 09.00 மணிக்கு கிங்ஸ்லி ஸ்கூலில் என்சிசி கேம்ப் ஐந்து நாட்கள் நடைபெற்றது. இதில் என்னுடன் சேர்த்து பெண்கள் 17 பேர் இருந்தோம்.

08.08.2024ம் தேதி இரவு சுமார் 3.00 மணிக்கு நாங்கள் அனைவரும் கிங்ஸ்லி ஸ்கூலில் உள்ள ஆடிட்டோரியத்தில் தூங்கிக் கொண்டு இருந்தோம்.

அப்போது ஒரு அக்கா என்சிசி மாஸ்டர் சிவா சார் கூப்பிடராங்க எழுந்து போ என்று என்னை எழுப்பி விட்டாங்க. நான் எழுந்து போகும் போது ஆடிட்டோரியம் படிக்கட்டு லெப்ட் சைடு இருட்டாக இருக்கும் இடத்தில் சிவா சார் இருந்தார்.

நீ இங்க வா, நான் இங்கே இருக்கேன் என்று கை அசைத்து காட்டினார். நானும் அந்த இடத்துக்கு போனேன். பின்னர் அவர் அருகில் என்னை உட்காரச் சொன்னார். சார் நான் படிக்கட்டுக்கு கீழே சேரில் உட்காருகிறேன் என்று சொன்னேன். ஒபே தி ஆர்டர் என்று சொல்லி எனது இடது கையை பிடித்து அவர் அருகில் உட்கார வைத்தார்.

பின்னர் என் மார்பு பகுதியில் கையை வைத்து அழுத்தினார். நான் கிளம்புகிறேன் கீழே என்று சொன்னேன். அதற்கு அவர் என்சிசியில் மெடிக்கல் செக்கப் என்று சொல்லி, பெண்களுக்கு பயம், வெட்கம் இருக்கக் கூடாது என்று முதல் நாளே அறிவுரை கூறினேன்.

இப்ப எதற்கு வெட்கப்படுகிறாய் என்று கூறி எனது கையை பிடித்து இழுத்து கீழே படுக்க வைத்தார். பின்னர் எனது வாய் மேல் கையை வைத்து மூடிக் கொண்டார். என்னால் கத்த ‘முடியவில்லை.

பின்னர் அவரது வாயை எனது வாய் மேல் வைத்தார். நான் அணிந்திருந்த ஆடை, உள்ளாடையை கழட்டினார். அவரது பிறப்புறுப்பை வைத்து தவறாக நடந்துகொண்டார்.

10 நிமிடங்கள் என்னை விடவில்லை. அப்போது எனக்கு அதிகமாக வலி ஏற்பட்டதால் நான் அழுதேன். 10 நிமிடங்களுக்கு பிறகு அவர் என்னை விட்டு விட்டார். எனக்கு பயம், படபடப்பு வந்து நான் அழுதுக் கொண்டே ஆடிட்டோரியம் போய் ஒரு அக்காவிடம் படுத்து கொண்டேன்.

பின்னர் அதிகாலை சுமார் 4.00 மணிக்கு கிரவுண்டுக்கு செல்ல அனைவரும் எழுந்து ரெடி ஆனார்கள். அப்போது என்னை சத்யா மேடம் எழுப்பினாங்க. நான் அவரிடம் எனக்கு அடி வயிறு வலிக்கிறது என்று கூறினேன். சரி படுத்துக்கோ என்று சொல்லி விட்டு கிளம்பிட்டாங்க.

காலை சுமார் 07.00 மணிக்கு டீ பிரேக்கிற்கு அனைவரும் டம்ளர் எடுக்க ஆடிட்டோரியம் வந்தார்கள். அப்போது சீனியர் அக்காவிடம் நான் எனக்கு நடந்ததை சொன்னேன்.

அந்த அக்காவின் அம்மா ஜெனிபர் கிங்ஸ்லி ஸ்கூலில் டீச்சராக வேலை செய்கிறார். அதனால் அந்த அக்கா, அப்புறம் எங்க அம்மாவிடம் சொல்லலாம் என்று சொன்னாங்க. பிறகு நான் வேறு உடை மாற்றி கொண்டு நானும் பெரேடுக்கு போனேன்.

பின்னர் நான் எனது தோழியிடம் சிவா சார் என்னிடம் தப்பா நடந்தார். உன்னிடம் அவர் அப்படி செய்தாரா என்று கேட்டேன். எனக்கு அப்படி எதுவும் நடக்கல. நான் சாரிடம் பேசுவதே இல்லை என்று கூறினாள்.

பிறகு சீனியர் அக்காங்க மற்றும் நான் அனைவரும் சேர்ந்து சதீஷ்குமார் பிரின்ஸ்பாலிடம் நடந்த விபரத்தை சொன்னோம்.

அதற்கு அவர், இந்த விஷயத்தை பெரிதுபடுத்தாதீங்க. வீட்டில் யாருக்கும் சொல்லாதீங்க…. பெற்றோர் ரொம்ப கஷ்டப்படுவாங்க என்று சொன்னார்.

பிறகு நாங்கள் அனைவரும் கிரவுண்டுக்கு சென்று பெரேடு முடித்து ஆடிட்டோரியம் வந்தோம். 09.08.24ம் தேதி மதியம் சுமார் 2.30 மணிக்கு ஆடிட்டோரியத்தில் அனைவருக்கும் பரிசு கொடுத்தார்கள்.

பிரின்ஸ்பால் எனக்கு ஒரு சீல்டு மற்றும் மூன்று மெடல் கொடுத்தார். பிரின்ஸ்பால் மீண்டும் எங்கள் அனைவரிடமும் அந்த விஷயத்தை பெரிதுபடுத்தாதீங்க என்று சொல்லி அனுப்பினாங்க.

பிறகு மாலை 5.00 மணிக்கு ஸ்கூல் பஸ்ஸில் ஏறி எனது பாட்டி வீட்டிற்கு சென்றேன். அதன் பிறகு நான் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று வந்தேன்.

16.08.24 ம் தேதி இரவு னக்கு பெண் உறுப்பு ரொம்ப வலிச்சதால் நான் அழுதேன். அப்போது என் அம்மா என்னை விசாரிச்சாங்க. முதல்ல நான் எதுவும் இல்லை என்று சொன்னேன்.

அதன் பிறகு நான் நடந்ததை கூறினேன். அப்புறம் என் அம்மா என்னை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அட்மிட் செய்தார்” என்று வாக்குமூலத்தில் நடந்தவற்றை கூறியுள்ளார் அச்சிறுமி.

12 வயது சிறுமி கூறிய இப்படி ஒரு வாக்குமூலம், பள்ளி வளாகத்திலேயே இப்படியா என்று பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்ற எண் 14/2024 U/s 5(0) r/w 6, 9(0) r/w 10, 21(2) POCSO Act – 2012 & 238 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவராமனை போலீசார் கைது செய்தனர்.

சிவராமனின் கூட்டாளிகளான கோமதி என்ற ஆசிரியை உட்பட 9 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியை உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி சம்பவத்தின் எதிரொலியாக தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும் பெற்றோரின் அனுமதியும், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

‘மனசிலாயோ’ … ‘வேட்டையன்’ முதல் சிங்கிள் கம்மிங்!

போகிற போக்கில் சொன்ன வார்த்தை… மனிதரை குரங்காக மாற்றிய போலி செய்தி!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share