ஹரியானா அரசு மருத்துவமனையில் MBBS மட்டுமே படித்த மருத்துவர், 50-க்கும் மேற்பட்டோருக்கு இதய அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Fake Doctor Arrested
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றியவர் பங்கஜ் மோகன் சர்மா. பொது மருத்துவரான இவர், இதயநோய் அறுவை சிகிச்ச்சைக்கான முறையான அனுமதி பெறாதவர். ஆனால் போலியான சான்றிதழ்களை கொடுத்து தம்மை இதயநோய் சிகிச்ச மருத்துவராக அடையாளப்படுத்தி இருக்கிறார் பங்கஜ் மோகன் சர்மா.
மேலும் ஃபரிதாபாத் அரசு மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களில் 50-க்கும் மேற்பட்டோருக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார் பங்கஜ் மோகன் சர்மா. இந்த அறுவை சிகிச்சையின் போது சிலர் இறந்தும் போயுள்ளனராம்.
இது தொடர்பாக சந்தேகம் அடைந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான சஞ்சய் குப்தா போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் போலி சான்றிதழ்களை வைத்து தம்மை இதயசிகிச்சை மருத்துவர் என பங்கஜ் மோகன் சர்மா காட்டிக் கொண்டது அம்பலமானது. இதனால் பங்கம் மனோஜ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.