”தொகுதி வரையறைக்கு எதிரான கூட்டம் நடைபெறும் இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்” என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். fair delimitation meeting will be in historical one : mkstalin
நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள்தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பின் பேரில் சென்னையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் இன்று காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உட்பட 7 மாநிலத்தைச் சேர்ந்த 24 கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஸ்டாலின் வாழ்த்து! fair delimitation meeting will be in historical one : mkstalin
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தலைவர்களை வரவேற்று ட்விட் செய்துள்ளார்.
அதில், “நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் சரியான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாளாக இன்று வரலாற்றில் பொறிக்கப்படும்.
முறையான தொகுதி மறுசீரமைப்புக்கான எங்கள் உறுதிப்பாட்டில் ஒன்றுபட்ட அனைத்து முதலமைச்சர்களையும் அரசியல் தலைவர்களையும் இந்தக் கூட்டத்திற்கு நான் அன்புடன் வரவேற்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கூட்டம் நடைபெறும் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சரியாக காலை 10 மணிக்கு வருகை தந்தார். அவரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், அமைச்சர்கள், ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதன்பின்னர் கூட்ட அரங்கிற்கு சென்ற ஸ்டாலின், வந்திருக்கும் தலைவர்களை சந்தித்து சால்வை அணிவித்து கெளரவித்தார். தொடர்ந்து அவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.