மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் இணைந்து நடித்த மாமன்னன் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு வடிவேலுக்கு மீண்டும் அதிகமான பட வாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டது. அதேபோல் தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பகத் பாசிலுக்கு என ஒரு தனி மார்க்கெட் உருவாகிவிட்டது.
இந்நிலையில் மீண்டும் பகத் மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு புதிய படத்தின் அப்டேட் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது.
பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் இந்த புதிய படத்தை பிரபல தமிழ் தயாரிப்பாளரான ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாகும்.
Super Good Films presents its 98th movie starring Fahad Faasil and Vadivelu #rbchoudary #supergoodfilms #fahadfaasil #vadivelu #sudheeshsankar #98 pic.twitter.com/F9tIcHsiET
— Super Good Films (@SuperGoodFilms_) January 1, 2024
படத்தின் அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டரில் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை மலையாள திரைப்பட இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்த போஸ்டரில் ஒரு மஞ்சள் நிற ஏடிஎம் கார்டில், தரை சாலை வழி தடை இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த படம் பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகிய இருவரின் பயணங்கள் குறித்த படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாமன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் பகத் பாசிலும் வடிவேலும் இணைந்து நடிக்கும் படம் குறித்த இந்த அப்டேட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
