நடிகர் ஃபகத் ஃபாசிலுக்கு ஏடிஹெச்டி (கவனக்குறைவு ஹைபராக்டிவ் ) பிரச்சனை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரம் ஃபகத் ஃபாசில். அவருடைய நடிப்பு திறமையால் மலையாளம் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநில ரசிகர்களின் ஆதர்சனமாக ஃபகத் கொண்டாடப்படுகிறார்.
சமீபத்தில் அவர் நடித்து வெளியான மாமன்னன், ஆவேஷம் உள்ளிட்ட திரைப்படங்கள் ஹிட் அடித்தன. இந்தநிலையில், தனக்கு ஏடிஹெச்டி (கவனக்குறைவு ஹைபராக்டிவ் ) பிரச்சனை இருப்பதாக ஃபகத் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொத்தமங்களம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் படிக்கும் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பஹத்,
“நான் இங்கு வந்தபோது பள்ளியில் உள்ள வசதிகளை சபீத் எனக்கு காண்பித்தார். இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு ஏடிஹெச்டி பிரச்சனை இருப்பதாக தெரிவித்தார்.
இந்த பிரச்சனையை சரிசெய்ய முடியுமா என்று அவரிடம் கேட்டேன். சிறுவயதிலேயே இந்த பிரச்சனையை கண்டறிந்து முறையான மருத்துவம் அளித்தால், எளிதில் சரிசெய்துவிடலாம் என்றார்.
41 வயதில் இந்த பிரச்சனையை சரிசெய்ய முடியுமா என்று அவரிடம் கேட்டேன். எனக்கு ஏடிஹெச்டி பிரச்சனை இருப்பதாக மருத்துவ ரீதியாக அறியப்பட்டேன். பெரிய அளவில் பிரச்சனை இல்லை என்றாலும், சில குறைபாடுகள் உள்ளது” என்று பொதுவெளியில் அறிவித்தார்.
தனக்கு ஏடிஹெச்டி பிரச்சனை இருப்பதாக ஃபகத் தெரிவித்திருத்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏடிஹெச்டி பிரச்சனை சரிசெய்யக்கூடியதா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
“குழந்தைகளிடமோ அல்லது பெரியவர்களிடமோ ஏடிஹெச்டி பிரச்சனை இருந்தால் சரிசெய்ய முடியாது. தொடர் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தெரபி மூலம் பிரச்சனை வீரியமாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மென்டல் ஹெல்த் வரையறையின் படி, ‘ஏடிஹெச்டி என்பது, கவனக்குறைவு, ஹெபர்ஆக்டிவ் பிரச்சனையால் ஒரு மனிதரின் வளர்ச்சியில் தடை ஏற்படும்’ என்று தெரிவிக்கிறது.
இதனை மருத்துவத்தில் நரம்பியல் தன்மை (neurodivergence) என்கிறார்கள். அதாவது ஏடிஹெச்டியால் பாதிக்கப்பட்ட நபர்களின் மூளையானது மற்றவர்களை விட வித்தியாசமாக செயல்படக்கூடிய தன்மையில் இயங்கும். உதாரணமாக இவர்களால் ஒரு வேலையை கவனமாக குறித்த நேரத்தில் முடிக்க முடியாது, சில சமயங்களில் எதையும் சிந்திக்காமல் சுய கட்டுப்பாட்டை இழந்து செயல்படுவார்கள்.
இந்தியாவில் இந்த பிரச்சனை பற்றி சரியான புரிதல் இல்லாததால், ஏடிஹெச்டியால் பாதிக்கப்பட்டவர்களை சோம்பேறிகள், நேர்மையற்றவர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்” என்று தெரிவிக்கிறார்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்