மோகன்லால் படத்தில் பகத் பாசில் ’ரெஃபரன்ஸ்’! – தமிழ் சினிமாவில் சாத்தியமா?

By uthay Padagalingam

|

Published on 20 Jul 2025, 1:05 PM

fafa reference in mohan lal film

ஒரு ஹீரோ நடிக்கும் படத்தில் இன்னொரு ஹீரோ நடித்த காட்சிகளோ அல்லது அவரைப் பற்றிப் பேசுவதாக உள்ள வசனங்களோ இடம்பெறுவது அபூர்வம். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் அப்படியொரு சிந்தனையே ரசிகர்கள் மத்தியில் எழவில்லை. ஆனால், ரஜினிகாந்த் தான் நடித்த பல படங்களில் கமல்ஹாசன் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

‘மங்காத்தா’ படத்தில் விஜய்யின் ‘காவலன்’ காட்சிகள் இடம்பெற்றது அப்போது பெரிதாகப் பேசப்பட்டது. வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்களைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர்களைப் போன்றே ஹீரோக்கள் ‘மிமிக்ரி’ செய்வது அவ்வப்போது நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அது போன்ற ‘ரெஃபரன்ஸ்’களை விரல் விட்டு எண்ணிவிடலாம். திரையில் மிகச்சில நொடிகளே வந்தாலும், அந்த இடங்கள் ரசிகர்களை ‘கூஸ்பம்ஸ்’ ஆக்கும். fafa reference in mohan lal film

ADVERTISEMENT

மேற்சொன்ன உதாரணங்கள் கூட, குறிப்பிட்ட ஹீரோக்கள் படங்களில் அவர்களது சமகால நாயகர்கள் பற்றிச் சொல்வதாகவே இருந்தன. அடுத்தடுத்த தலைமுறை ஹீரோக்களைப் பற்றி பொதுவெளியில் எந்தவொரு மூத்த நடிகரும் பேசுவதில்லை எனும் நிலையில், அவர்களது படங்களில் அப்படிப்பட்ட ‘ரெஃபரன்ஸ்’ காண முயற்சிப்பது குதிரைக்கொம்பை எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது.

மலையாளத் திரையுலகில் எப்போதுமே அப்படியொரு வருத்தம் கிடையாது என்று அங்குள்ள ரசிகர்கள் காலரை தூக்கிவிட்டுக் கொள்வார்கள். அவர்கள் அதனைச் செய்யும்படியான சம்பவம் ஒன்று இப்போது நிகழ்ந்திருக்கிறது.

ADVERTISEMENT

சத்யன் அந்திக்காடு இயக்கிய ‘ஹ்ருதயபூர்வம்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது.

அதில், இந்தி பேசுகிற ஒரு பெருநகரத்தில் இருப்பவராகத் தோன்றுகிறார் மோகன்லால். தான் எதிர்கொள்கிற ஒரு இளைஞர் பகத் பாசில் ரசிகர் என்று தெரிந்ததும், அவரிடத்தில் ‘மலையாளத்துல இன்னும் நிறைய சீனியர் நடிகர்கள் எல்லாம் இருக்காங்க’ என்கிறார்.

ADVERTISEMENT

அதையும் மீறி ‘நோ, ஒன்லி பகத் பாசில்’ என்கிறார் அந்த நபர். அதற்கு ‘எப்படியோ போங்க’ என்பது போல ரியாக்‌ஷனை உதிர்த்துவிட்டு மோகன்லால் செல்வதாக அமைந்திருக்கிறது அந்த டீசர்.

இந்த படத்தில் சித்திக், லாலு அலெக்ஸ், பாபுராஜ் மற்றும் ‘பூவே உனக்காக’ சங்கீதா உள்ளிட்ட சீனியர் நடிகர்கள் மட்டுமல்லாமல் இன்றைய ரசிகர்களின் பேவரைட்டான சங்கீத் பிரதாப், மாளவிகா மோகனன் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

இயக்குனரின் மகன்களில் ஒருவரான அகில் இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார். அனூப் சத்யன் இதில் இணை இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை வசனத்தை சோனு டி.பி. என்பவர் எழுதியிருக்கிறார். இவர் ‘நைட் கால்’ எனும் குறும்படத்தை எழுதி இயக்கியவர்.

ஆக, பெரும் ஜாம்பவான்கள் இரண்டு பேர் இணைகிற ஒரு திரைப்படத்தின் அடிநாதமாகச் சில இளைய தலைமுறையினர் இருப்பது தெளிவாகியிருக்கிறது. அவர்களது படைப்பாக்கத்தில் ‘பகத் பாசில்’ ரெஃபரன்ஸுக்கு தரும் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனைத் திரையில் பிரதிபலித்திருக்கிறார் மோகன்லால்.

இது போன்ற விஷயங்களைத் தமிழ் திரையுலகில் எப்போது எதிர்பார்க்கலாம்..?! 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

uthay Padagalingam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel