விஜய் இப்போது வரை நடிகர்தான்… நல்ல தலைவனாக சீமான் கொடுக்கும் ஐடியா!

Published On:

| By Kumaresan M

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது.

இது குறித்து மதுரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ‘விஜய் கட்சி தொடங்குவதற்கு நடிகர் என்ற புகழ் ஒன்றே போதும். மக்களோடு மக்களாக நின்று களத்தில் நிற்க வேண்டும். இந்த மண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை அவரும் எதிர்கொள்கிறாரோ ? அப்போதுதான் அவர் தன்னை நல்ல தலைவராக மாற்றிக் கொள்ள முடியும். என் தம்பியின் மாநாடு சிறப்பாக நடைபெறுவதை நான் பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் மதுரையில் பெய்த மழை குறித்து சீமான் கூறுகையில் ‘ஒரு சிறிய மழைக்கு மதுரை தாங்கவில்லை . தொடர்ந்து மூன்று நாள் நான்கு நாட்கள் பெய்திருந்தால் என்ன ஆயிருக்கும். சென்னையிலே ஒரு மணி நேரத்திற்கு பெய்த மழைக்கே நாங்கள் மிதந்தோம் . அடிப்படை கட்டமைப்பு எதுவுமே செய்யவில்லை.

இந்த நேரத்தில் கோபப்பட்டு வருத்தப்பட்டு எதுவும் ஆகப் போவதில்லை . அதே நேரத்தில் அவர்களுக்கு ஓட்டு போடும் போது, அந்த  கோபம் எங்கு செல்கிறது என்று தெரியவில்லை . இதுதான் மக்களின் பெரிய பிரச்சினையாக உள்ளது . எங்கள் கட்சிக்குள்ளே இருந்து கொண்டு கட்சிக்குள் வேலை செய்யாமல் கட்சிக்குள்ளே தனக்கான ஆட்களை சேர்க்கும் நபர்களை நாங்கள் எங்கள்  வெளியேற்றி வருகிறோம்.

எனக்கு மக்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்று சொல்ல முடியாது. காசு கொடுக்காமல் பெரிய கட்சிகள் கூட்டம் கூட்ட முடியாது . தேர்தலை பெரிய கட்சிகள் கூட்டணி இல்லாமல் எதிர்கொள்ள முடியுமா ? அதேபோல் ஒரு பெரிய கட்சியில் ஒரு கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஓட்டுக்கு காசு கொடுக்காமல் உங்களுக்கு கூட்டம் வருமா ? சொந்த கட்சிக்கரன் கூட காசு கொடுத்தால்தான்  வருவான் . எனக்கு எதுவுமே இல்லாமல் 36 லட்சம் பேர் வாக்களித்தனர் .

என் கட்சி வேட்பாளர் அனைவரும் புதியவர்கள் . எந்த பின்புலமும் இல்லை. அதனால் மக்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை . கூட்டணி வைத்தால் நான் நன்றாக இருப்பேன். என் குடும்பம் நன்றாக இருக்கும் . நாடும் மக்களும் நாசமாக போவார்கள்.  என் பயணம் என் காலை  மட்டும் நம்பி உள்ளது.  அடுத்தவரின் கால்களை நம்பி என் பயணத்தை தொடர முடியாது.  அதனால் கூட்டணி எனபது எனக்கு கடினமானது ‘என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 தவெக மாநாடு : சாரை சாரையாக வரும் கூட்டம் : கடும் போக்குவரத்து நெரிசல்!

“வெளிச்சம் போட்டுக் காட்டிய விஜய்” : ஆதவ் அர்ஜுனா வரவேற்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share