டி20 கிரிக்கெட்: அரையிறுதியில் இந்தியா

Published On:

| By Balaji

டுவென்டி – 20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடக்கிறது. நேற்று மொகாலியில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான லீக் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவை பீஃல்டிங் செய்ய அழைத்தார். இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில், 6 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி, 19.1 ஓவரில், 4 விக்கெட்களுக்கு, 161 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. விராத் கோலி, 82 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி 6 புள்ளிகளைப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னதாக, பி-பிரிவில் இருந்து நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share