கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பிலும் தனியார் நிறுவனங்கள் சார்பிலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பட்டப்படிப்பு முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தேர்ச்சிபெறுவர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன. 23ஆம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னையைச் சேர்ந்த ஸ்கைபுரோ டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இந்த முகாமை நடத்தவுள்ளது. இந்த முகாமில் 150க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவிருக்கின்றனர். டேட்டா கன்வெர்டர், டேட்டா ஆபரேட்டர் ஆகிய பணிகளுக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தத் தகுதியில் 21 வயதுக்குமேல் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.

ADVERTISEMENT

இந்த முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 8500 முதல் ரூ. 9,200 வழங்கப்படும் எனவும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் கூறியுள்ளார்.

இதுபோன்று கோவையிலும் வரும் ஜனவரி 25ஆம் தேதி மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட ஹரிஹரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தேஜாசக்தி மகளிர் தொழில்நுட்பக் கல்லுாரி இரண்டும் இணைந்து, மகளிருக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை ஜன. 25ஆம் தேதி நடத்தவுள்ளது என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இது, தேஜாசக்தி மகளிர் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில் ஜனவரி 25 காலை 9 மணியளவில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share