மக்கள் நலக் கூட்டணிக்கும், தேமுதிக-வுக்கும் இடையே கூட்டணி உறுதிசெய்யப்பட்ட பின்னர், தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய வைகோ, ‘‘மக்கள் நலக் கூட்டணி, இனி கேப்டன் அணி என்று அழைக்கப்படும். மகளிர் மாநாட்டில் விஜயகாந்த் தன்னை ‘கிங்’ என்று அறிவித்ததை, இந்த நான்கு கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றிபெறும். அப்போது கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். தென் மாவட்டங்களில் நடைபெற உள்ள மக்கள் நலக் கூட்டணி பிரச்சாரக் கூட்டங்களில் தேமுதிக சார்பில் பிரேமலதா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள். கோவில்பட்டி பரப்புரையில் சுதீஷ் கலந்துகொள்வார். இந்தக் கூட்டணி அமைய முயற்சித்தவர்களுக்கு நன்றி’’ என்றார்.
உருவானது கேப்டன் அணி- வைகோ
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
