ADVERTISEMENT

அமெரிக்காவில் பெருகும் வேலைவாய்ப்பு!

Published On:

| By Balaji

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டுத் தொழிலாளர் துறையின் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், வேலையின்மையின் விகிதம் குறைந்துள்ளதாகவும் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 வருடங்களில் வேலையின்மை அதிகளவில் குறைந்துள்ளதாக இவ்வறிக்கையின் தகவல் கூறுகிறது. கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறையில் ஜூலை மாதத்தில் 1,80,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்துறைகளில் எதிர்பாராதவிதமாக 2,09,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல்களை அமெரிக்காவின் தொழிலாளர் துறை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மாதாந்திர வேலைவாய்ப்பு அதிகரிப்பின் சராசரி 195,000 ஆகியுள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 4.4 சதவிகிதமாக இருந்துள்ளது. இந்த விகிதம் ஜூலை மாதத்தில் 4.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. தொழிலாளர் வளத்தில் வேலைக்கு ஏற்ற வயதுடன் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 62.8 சதவிகிதமாக இருந்துள்ளது. இந்த விகிதம் ஜூலை மாதத்தில் 62.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தக் குறியீடுகள் அனைத்தும் கடந்த ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதையே காட்டுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share