ADVERTISEMENT

இன்று பத்திரப்பதிவு செய்ய போகிறீர்களா?: முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் வழங்க பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டுள்ளது.  extra slots distribute registration office today

சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவுகள் அதிகம் நடைபெறும் என்பதால், பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும். 

ADVERTISEMENT

அதன்படி இன்று (ஜூன் 27) முகூர்த்த தினத்தை முன்னிட்டு பத்திரப்பதிவு துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதில்,  “சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போது ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான 27.06.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன

எனவே, ஆனி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினம் 27.06.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும். 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லவகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share